கேது பெயர்ச்சி புத்தியைக் கொடுத்தால், ராகு பண மழை பொழிவார்! ஜாக்பாட் காத்திருக்கு

Rahu-Ketu Gochar Oct 30: அன்னை லக்ஷ்மியின் அருளை பரிபூர்ணமாக கொடுக்குமா நாளை நடைபெறும் ராகு பெயர்ச்சி? எந்த லக்னத்தில் ராகு இருந்தால் நன்மை?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 29, 2023, 02:31 PM IST
  • மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கலாம்
  • ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
  • திடீர் பண வரத்து உண்டு
கேது பெயர்ச்சி புத்தியைக் கொடுத்தால், ராகு பண மழை பொழிவார்! ஜாக்பாட் காத்திருக்கு title=

ராகு பெயர்ச்சி 2023: சாயா கிரகமான ராகு இன்னும் 24 மணி நேரத்தில் ராசி மாற இருக்கிறார். ராசி மாறும் ராகு, அவரவர் லக்னப்படி சிலருக்கு சாதாரண பலன்களும், சிலருக்கு மிகப் பிரபலமான ராஜயோகத்தையும் அள்ளித் தர தயாராகிவிட்டார். ஆனால், அவரவர் ஜாதக அமைப்பின்படியே பலன்கள் இருக்கும் என்றாலும் பொதுப்பலன்களின்படி சில ராசிகளுக்கு ராகு பெயர்ச்சி நன்மையைத் தரும்.

ஜோதிடத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சில கிரகங்களின் பெயர்ச்சி அதில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எப்போதும் பிற்போக்கு இயக்கத்தில், அதாவது இடதிசையில் நகரும் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள்ல் ஆகும்.

அக்டோபர் 30-ம் தேதி ராகு மீனத்தில் இருந்து விலகி மேஷ ராசியில் நுழையும் ராகு புத்திசாலித்தனத்தை சரியான இடத்தில் பயன்படுத்த வைப்பார். ராகு ஒருவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் கொடுப்பார்? தெரிந்துக் கொள்வோம்.

லக்னத்தில் ராகு

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருந்தால், ஜாதகருக்கு உடல் வலிமை அதிகமாக இருக்கும். அதோடு, பிடிவாத குணம் கொண்டவராகவும், வாயால் கெட்ட பெயர் வாங்கும் விவாதம் செய்யும் நபராக இருப்பார்.

மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பிறகு கும்ப ராசியில் சனி உச்சம்.. இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டும்

இரண்டாம் இடத்தில் ராகு

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ராகு இரண்டாம் இடத்தில் இருந்தால், முன்கோபம் கொண்டவராகவும், அனைவரையும் கடிந்து பேசுபவரகாவும் இருப்பாஅர். மேலும், தனக்கு சரியெனப் படுவதை மட்டுமே செய்யும் அவர், ஆடம்பரச் செலவு செய்வதில் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மூன்றாம் இடத்தில் ராகு

ராகு மூன்றாம் இடத்தில் இருந்தால், சகோதரிக்கு சரியில்லை. பொன் நகைகள் சேரும் பாக்கியம் அவருக்குக் கிடைக்கும், 

நான்காம் இடத்தில் ராகு

ராகு ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் பெற்றோருக்கு உடல் நலிவு ஏற்படும். குறிப்பாக அம்மாவுக்கு நல்லதில்லை என்று சொல்வார்கள்.

ஐந்தாம் இடத்தில் ராகு

ராகு ஐந்தாம் இடத்தில் இருந்தால், குழந்தைகளினால் மன வருத்தம் ஏற்படும். புத்திர தோஷமும் உண்டு.  பூர்வ புண்ணியம் குறைவாக இஇடத்தில் இருந்தால், நல்லறமான இல்லறம், செல்வம் செல்வாக்கு, தீர்க்காயுள் உண்டு.  

மேலும் படிக்க | சனி, சுக்கிரன் மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்

ஆறாம் இடத்தில் ராகு

திருமணத்தடை, கலப்பு மணம், வீண் பழிச்சொல் ஏற்படும். திடீர் யோகமும் உண்டு.

எட்டில் ராகு

கடின மனம் கொண்டவராக இருப்பார். ஆயுள் அதிகமாக இருக்கும்

ஒன்பதாம் இடத்தில் ராகு

ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தில் ராக்கு இருந்தால், தந்தைக்கு நஷ்டம் ஏற்படும். பரம்பரை சொத்துக்களில் வில்லங்கம் உண்டாகும். ஆனால், சொந்தமாக சம்பாதித்து பூமி, பொருள் சேர்க்கை செய்யும் யோகம் கிடைக்கும்.

பத்தாம் இடத்தில் ராகு

ஒருவரின் ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் ராகு இருந்தால், பணக்கார யோகம் உண்டு. நவரத்தினங்கள் சேரும். யோகமான வாழ்வு ஏற்படும். வெளிநாடு பயணங்கள் ஏற்படும்.

11 ம் இடத்தில் ராகு

11வது இடத்தில் ராகு இருந்தால் பித்ரு தோஷம் இருப்பதாக சொல்வார்கள். திடீர் தனவரவு ஏற்படும். அசையா சொத்துக்களான நிலத்தின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். 

12ம் இடத்தில் ராகு

12ம் இடத்தில் ராகு இருந்தால் தூக்கம் கெடும். சிந்தனைகள் அதிகம் இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். சர்ப்ப தோஷம் இருப்பதாக சொல்வார்கள்.

மேலும் படிக்க | அக்டோபர் 30 நாளை கேது பெயர்ச்சி! எந்த ராசிகளுக்கு திண்டாட்டம்? யாருக்கு கொண்டாட்டம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News