ஜோதிடத்தில், எதிர்காலம் பற்றி அறிய பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன. ராசியின் அடிப்படையில் ஒருவரின் இயல்பு மற்றும் எதிர்காலத்தை அறிவது இந்த வழிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு நபரின் ராசியும் அவர் பிறந்த நேரத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அந்த நபரின், மன இயல்பு, குணம், எதிர்காலம் ஆகியவற்றை கணிக்கலாம். காதல் உறவுகள் மிகவும் நுட்பமான உணவு பூர்வமான சரங்களால் பிணைக்கப்பட்டுள்ளன.
இன்று ஜோதிடத்தில் கூறப்படும் ராசிகளின் குணாதிசயங்களின் அடிப்படையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகம் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த நபர்கள் தங்கள் காதல் இயல்பு காரணமாக தங்கள் துணையின் இதயத்தை எளிதில் வெல்வார்கள். இவர்களின் காதல் வாழ்க்கை எப்பொழுதும் மணம் வீசிக் கொண்டே இருப்பதற்கு இதுவே காரணம். எந்த ராசிக்காரர்கள் மிகவும் காதல் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் காதல் வயப்பட்டவர்கள் மட்டுமல்ல, காதலை வெளிப்படுத்துவதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்கள். இந்த நபர்கள் பெரும்பாலும் காதல் மனநிலையில் இருப்பார்கள், எனவே அவர்களின் காதல் வாழ்க்கை எப்போதும் நன்றாக இருக்கும். அவர்கள் தங்கள் துணையை மகிழ்விக்க புதிய வழிகளைக் கண்டுபிடித்து எப்போதும் அவரின் மனதை மயக்குவதில் தவறுவதே இல்லை.
மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் சிறந்த ஆளுமைப் பண்பு கொண்டவர்கள். எளிதில் காதல் வயப்படுவார்கள். அவர்கள்தனது காதலியை அல்லது வாழ்க்கைத் துணையை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு, மட்டுமல்லாமல், அவரது உணர்வுகளை மதித்து, அவர்களது தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதில் வல்லவர்கள். இவர்கள் காதல் துணை மட்டுமல்ல, யாருடைய மனதையும் எளிதில் வெல்வார்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் காதல் குணம் கொண்டவர்கள், காதல் துணையை அல்லது வாழ்க்கைத் துணையை ஈர்க்கும் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அவருடன் முடிந்தவரை அதிக நேரம் செலவிட முயற்சி செய்வார்கள். இந்த ராசிக்காரர்கள் உலகத்திற்காக எப்படி இருந்தாலும் சரி, ஆனால் அவர்கள் தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் காதல் விஷயத்திலும் மிகவும் கில்லாடிகளாக இருப்பார்கள். இந்த நபர்கள் மிகவும் ஆற்றல் மிக்கவர்கள். அவர்களை நோக்கி எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் காதல் துணையை மகிழ்விக்க புதிதாக ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள்.
மேலும் படிக்க | நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ