மேஷத்தில் புதன் பெயர்ச்சி! ‘இந்த’ ராசிக்கு பண விரயம்; கவனம் தேவை!

மேஷ ராசிக்குள் புதன் நுழையும் நிலையில், ஏற்கனவே செவ்வாய் மேஷ ராசியில் இருக்கிறார். புதனும் செவ்வாயும் கடுமையான பகை உணர்வு கொண்ட நிலையில், இவை இரண்டும் ஒரே ராசியில் இருப்பதால் பாதிப்புகள் ஏற்படும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 22, 2023, 08:58 PM IST
  • பணத்தை முதலீடு செய்வதற்கு முன், அதன் லாபம் மற்றும் நஷ்டத்தை சரியாக மதிப்பிடுங்கள்.
  • உங்கள் வேலையில் நம்பிக்கை வைத்து முன்னேறத் திட்டமிட வேண்டும்.
  • புதனும் செவ்வாயும் ஒரே ராசியில் இருப்பதால் பாதிப்புகள் ஏற்படும்.
மேஷத்தில் புதன் பெயர்ச்சி! ‘இந்த’ ராசிக்கு பண விரயம்; கவனம் தேவை!

புதன் ராசி பரிவர்த்தனை: மார்ச் 31 அன்று மாலை 3:28 மணிக்கு செவ்வாயின் வீட்டிற்கு அதாவது மேஷ ராசிக்குள் புதன் நுழைகிறார். ஏற்கனவே செவ்வாய் மேஷ ராசியில் இருக்கிறார். புதனும் செவ்வாயும் கடுமையான பகை உணர்வு கொண்ட நிலையில், இவை இரண்டும் ஒரே ராசியில் இருப்பதால் பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக, தனுசு ராசிக்காரர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் நிலை குறித்து தாழ்வு மனப்பான்மையை உருவாக்கலாம். இப்போது நீங்கள் உங்கள் வேலையில் நம்பிக்கை வைத்து அதன் உதவியுடன் முன்னேறத் திட்டமிட வேண்டும். இதற்காக, உங்கள் வேலைத் திறன் சிறப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

புதன் ராசி பரிவர்த்தனை காலகட்டத்தில்  நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. எனவே பணத்தை முதலீடு செய்வதற்கு முன், அதன் லாபம் மற்றும் நஷ்டத்தை சரியாக மதிப்பிடுங்கள். அரசு அதிகாரிகளிடம் ஏதேனும் வேலை இருந்தால், அவர்களிடம் மிகவும் பணிவாகப் பேசுங்கள், அவர்களின் பதில் திருப்திகரமாக இல்லாவிட்டாலும், அவர்களுடன் வாக்குவாதம் வேண்டாம். இல்லையெனில் உங்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். உங்கள் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களிடம் நல்ல முறையில் பேச வேண்டும். இதனால் பல சிக்கல்களை தவிர்க்கலாம்

இளைஞர்கள் மனதில் இனம் புரியாத பயம் இருக்கலாம். எந்த வகையான அரசாங்க விதிகளை மீறுபவர்களும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும், ஆனால் தினசரி அட்டவணையை உருவாக்கி படிக்க வேண்டும். தொடர் பயிற்சி மற்றும் பாடங்களை திரும்பத் திரும்பச் செய்தால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும்.

மேலும் படிக்க | Navratri 2023: நவராத்திரிக்கு விரதம் இருக்கீங்களா? இந்த 5 விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்!

பட்ஜெட் போடாமல் சந்தையில் ஷாப்பிங் செய்வது வீட்டின் மாதாந்திர பட்ஜெட்டை மிகவும் பாதித்து விடும். குழந்தையின் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். எனவே அவரது ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அவரது உணவில் சத்துள்ள உணவை அதிகரிக்கவும். அதனால் நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையை பெற முடியும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள், மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுங்கள். அதிக வேலை காரணமாக, உடல் மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். நீங்கள் பயணத்தில் எங்காவது சென்றால், தெரியாத நபர்களுடன் நட்பு கொள்ள முயற்சிக்காதீர்கள்.  உங்கள் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Chaitra Navratri 2023: சைத்ர நவராத்திரியில் இப்படி வழிபட்டால் துர்கை அருள் பொழிவாள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News