சனி ஜெயந்தி... இந்த ராசிகளின் வாழ்க்கையில் பொற் காலம் ஆரம்பம்..!!

வைகாசி அமாவாசை திதி சனி ஜெயந்தியான இன்று ஜூன் 6ஆம் தேதி வைகாசி அமாவாசை அன்று 5 ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ந்து சுப யோகங்கள் உருவாகி வருகிறது என்கின்றனர் ஜோதிடர்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 6, 2024, 08:09 AM IST
  • தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.
  • வைகாசி அமாவாசை திதி சனி ஜெயந்தியாக இந்து மதத்தில் முக்கியமாக கருதப்படுகிறது.
  • வருமான வாய்ப்பை உயர்த்த திட்டமிடுவீர்கள்.
சனி ஜெயந்தி... இந்த ராசிகளின் வாழ்க்கையில் பொற் காலம் ஆரம்பம்..!! title=

வைகாசி அமாவாசை திதி சனி ஜெயந்தியாக இந்து மதத்தில் முக்கியமாக கருதப்படுகிறது. அமாவாசை அன்று நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதிலும் சில அமாவாசைகள் உண்டு, அவை சிறப்பு வாய்ந்தது. வைகாசி அமாவாசை அன்று சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இன்று ஜூன் 6ஆம் தேதி வைகாசி அமாவாசை அன்று 5 ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ந்து சுப யோகங்கள் உருவாகி வருகிறது என்கின்றனர் ஜோதிடர்கள். இது அவர்களுக்குப் பல நன்மைகளைத் தரும். அவருடைய வாழ்க்கையில் பொன்னான நாட்கள் தொடங்கும் என்று சொல்லலாம்.

மேஷம்: உத்தியோகத்தில் உயரங்களை அடைவீர்கள். திட்டமிட்ட வேலைகள் நன்றாக நடக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி ஆதாயம் உண்டாகும். கைக்கு கிடைக்காத பணம் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் பெருகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். தாய் வழி உறவுகளால் ஆறுதல் ஏற்படும். குழந்தைகளின் ஒத்துழைப்பு மேம்படும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிம்மதி இருக்கும். 

ரிஷபம்: வைகாசி அமாவாசையும், சனி ஜெயந்தியும் உங்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரப் போகிறது. புதிதாக ஏதாவது செய்ய முயற்சிப்பீர்கள். ஆரம்பத்தில் இந்த மாற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், பின்னர் அது உங்களுக்குப் பயனளிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல நாள். உங்கள் வாழ்க்கையில் பொன்னான நாட்கள் தொடங்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் உண்டாகும். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்

கடகம்: உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அளவில் அதிகரிப்பு இருக்கலாம். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். புதிய வேலையைத் தொடங்க ஏற்ற நாள். எனவே திட்டங்களை வகுத்துக் கொண்டு தயாராக இருங்கள். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். 

துலாம்: வைகாசி அமாவாசை அன்று நடக்கும் தற்செயல் நிகழ்வுகள் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். புதிய திட்டங்களை தீட்டலாம். காதல், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நல்ல செய்தி கிடைக்கலாம். சுப காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும். பழைய கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். 

மகரம்: உங்கள் வாழ்க்கையில் பொன்னான நாட்கள் தொடங்கும். எல்லா துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். நீங்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உணருவீர்கள். நிதி நிலையும் நன்றாக இருக்கும். சுற்றுலா செல்லலாம். நெருங்கியவர்களைச் சந்திப்பது நிம்மதியைத் தரும். தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வருமான வாய்ப்பை உயர்த்த திட்டமிடுவீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். 

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | அங்காரக தோஷத்தை விலக்கிக் கொண்ட செவ்வாய்! ’3’ ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News