சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம், செல்வம் கொழிக்கும்

Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 26, 2024, 11:43 AM IST
  • கடக ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
  • சமுதாயத்தில் இழந்த மரியாதையும் மதிப்பும் மீண்டும் கிடைக்கும்.
  • பணம் சம்பாதிக்க பல சிறப்பு வாய்ப்புகள் கிடைக்கும்.
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம், செல்வம் கொழிக்கும் title=

Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சாஸ்திரத்தின் படி கிரகங்களுக்கும் ராசிகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. கிரகங்களில் ஏற்படும் மாற்றங்கள் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், தீய விளைவுகளையும் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. 

ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரனுக்கு தனித்துவமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சுக்கிரன் உலக இன்பம், மகிழ்ச்சி, செல்வச் செழிப்பு, பண வரவு, அழகு, அன்பு ஆகியவற்றின் காரணியாக பார்க்கப்படுகிறார். சுக்கிரன் சுமார் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார்.

அசுர குருவான சுக்கிரன், இன்னும் சில நாட்களினல் தனது ராசியை மாற்றவுள்ளார். இதன் காரணமாக 12 ராசிகளில் 3 ராசிக்காரர்களின் நேரம் மிக நன்றாக இருக்கும். தற்போது சுக்கிரன் மிதுன ராசியில் உள்ளார். இன்னும் சில நாட்களில் அவர் சந்திரனின் ராசியான கடக ராசியில் பெயர்ச்சி ஆவார். இதனால் சில ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கும். 

சுக்கிரன் எவ்வளவு காலம் கடகத்தில் இருப்பார்? 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மகிழ்ச்சியின் கிரகமான சுக்கிரன் 07 ஜூலை 2024 அன்று கடக ராசியில் பெயர்ச்சி ஆவர. இந்நாளில் அவர் மிதுன ராசியிலிருந்து விலகி கடகத்தில் நுழைவார். சுக்கிரன் இந்த ராசியில் சுமார் 25 நாட்கள் இருப்பார். அதாவது ஆகஸ்ட் 1ம் தேதி சுக்கிரன் மீண்டும் தனது ராசியை மாற்றுவார். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries)

ஜூலை 7, 2024 அன்று, சுக்கிரன் தனது ராசியை மாற்றுகிறார். அவர் கடக ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களை பெற்று வெற்றி பெறுவார்கள். வேலையில் லாபமும், நிதி நிலையில் முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்துடன் ஆடம்பர வசதிகளை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். 

மேலும் படிக்க | ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோ

கடகம் (Cancer)

கடக ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். சமுதாயத்தில் இழந்த மரியாதையும் மதிப்பும் மீண்டும் கிடைக்கும். பணம் சம்பாதிக்க பல சிறப்பு வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் அதிகரிக்கும். இந்த காலத்தில் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நிறைவேறும். உங்கள் பேச்சால் பலரது மனதை வெல்வீர்கள். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கலாம்.

துலாம் (Libra)

சுக்கிரன் சந்திரனின் ராசி கடகத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதன் மூலம் துலா ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றமும் வருமானமும் கூடும். திருமணத்திற்காக காத்திருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். எதிர்பார்த்த நல்ல செய்தி விரைவில் கிடைக்கும். சமூக மரியாதை கூடும். சௌகரியங்களையும் வசதிகளையும் அனுபவிப்பீர்கள். உங்கள் நம்பிக்கை மற்றும் துணிச்சலால் தடைப்பட்டிருக்கும் பல பணிகளை செய்து முடிப்பீர்கள். சிக்கிய பணத்தை இப்போது மீட்க முடியும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஒரே நாளில் அருணாச்சலேஸ்வரருக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கை மொத்தம் 3 கோடி ரூபாய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News