வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?

ஒருவரது வசதியான இடம் என்றால் அது அவரது வீடு தான், அப்படிப்பட்ட இடம் என்றுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் நாம் சில வாஸ்து சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Mar 27, 2023, 08:31 AM IST
  • கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கிய நுழைவாயில் உள்ள வீடுகளைத் தேர்வு செய்வது நல்லது.
  • தூய்மை என்பது வீட்டில் நேர்மறையான ஆற்றல் பெருக ஒரு சிறந்த வழி.
  • கற்றாழை போன்ற முள் செடிகளை வீட்டிற்குள் வைக்கக்கூடாது.
வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?

இந்த உலகில் உங்கள் வீடு மிகவும் வசதியான இடமாகும், மேலும் அதுவே உங்களது மிகவும் விலையுயர்ந்த உடைமையாகும். உங்களின் பயன்பாட்டு பில்களை செலுத்துதல், மொத்த பொருட்களை வாங்குதல், உங்கள் உட்புறங்களைச் செய்தல் போன்றவற்றுடன் வாஸ்து சாஸ்திரத்தின் சில குறிப்புகளைப் பின்பற்றினால், அது உங்கள் வீட்டின் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

1) வாஸ்து சாஸ்திரம் என்பது நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் ஈர்ப்பதாகும், வாஸ்து சாஸ்திரத்தின்படி சில சில மாற்றங்களை செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும்.  நேர்மறை ஆற்றை பெற கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கிய நுழைவாயில் உள்ள வீடுகளைத் தேர்வு செய்வது நல்லது.  இரண்டாவதாக வீட்டிற்கு வந்தவுடன் கை, கால்களை கழுவுதல், இருட்டாக இருக்கும் போது வீட்டில் விளக்கு வைப்பது போன்ற சிறிய விஷயங்கள் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வர உதவும்.  தீபம் ஏற்றி, தூபக் குச்சிகளைக் காட்டி, தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு சிறிய பிரார்த்தனையைச் செய்யும்போது உங்கள் வீட்டிலுள்ள தீய சக்திகள் விலகி நல்ல சக்திகள் பரவ தொடங்கும்.

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

2) தூய்மை என்பது வீட்டில் நேர்மறையான ஆற்றல் பெருக ஒரு சிறந்த வழி, உங்களால் முடிந்தவரை வீட்டை தூய்மையாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.  நீங்கள் ஒரு வருடமாக பயன்படுத்தாத பொருட்களை வீட்டிலிருந்து அப்புறப்படுத்துங்கள், நீங்கள் அவற்றை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.  உங்கள் வீட்டில் தூசி படியாமல் பார்த்துக்கொள்ளுங்கள், பொருட்கள் அனைத்தையும் நேர்த்தியாக அடுக்கி வைத்திருங்கள். தூய்மை இல்லாத வீட்டில் குழப்பம் அதிகரிக்கும், குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.  சுத்தமான வீடு நிறைய நேர்மறை ஆற்றலை பிரதிபலிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

3) உங்கள் வீட்டின் மூலைகளின் சுவர்களில் கூர்மையான முனைகள் எதுவும் உள்ளதா என்பதை கவனமாகப் பாருங்கள்.  நீங்கள் வாங்கப்போகும் வீட்டில் ஏதேனும் வெடிப்போ அல்லது கூர்மையான முனைகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.  எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் பல கூர்மையான விளிம்புகளைக் கொண்ட வீட்டை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.  அதேபோல வீட்டை வாங்கிய பிறகும் ரேக்குகள், அலமாரிகள் மற்றும் ஃபர்னிச்சர் ஆகியவற்றின் விளிம்புகள் வட்டமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

4) உங்கள் படுக்கையறையில் சுவர்கள் மற்றும் மென்மையான அலங்காரங்களுக்கு இனிமையான வண்ணங்களைப் பயன்படுத்துங்கள்.  மகிழ்ச்சியை தரக்கூடிய படங்களை உங்கள் அறையில் வைத்திருப்பதன் மூலம் தம்பதியினருக்கு இடையிலான உறவை வலுப்படுத்த முடியும்.  உங்கள் படுக்கையில் கண்ணாடி அல்லது கண்ணாடியால் செய்யப்பட்ட எதையும் எதிர்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள், இது கெட்ட கனவுகளைக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.

5) கற்றாழை போன்ற முள் செடிகளை வீட்டிற்குள் வைக்கக்கூடாது, அவை எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கின்றன.  வீட்டில் செயற்கை துணி அல்லது பிளாஸ்டிக்கால் ஆன பூக்கள் அல்லது செடிகளை வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.  வேணுமென்றால் அதற்கு பதிலாக உண்மையான பூக்களால் உங்கள் வீட்டை அலங்கரித்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியில் இருந்து தப்பிக்க... வீட்டில் வன்னி மரச்செடியை நடவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News