புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் சூரிய மஹாதிசை! பலன்களும் பரிகாரங்களும்!

ஜோதிடத்தில் சூரியனை கிரகங்களின் ராஜா என்று அழைப்பர். வெற்றி, ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு ஆகியவற்றைத் தரும் கிரகம் சூரியன். ஜாதகத்தில் சூரியன் சுபமாக இருந்தால், சூரியனின் மஹாதசை அந்த நபரை தனது தொழிலில் மிக உயரத்திற்கு அழைத்துச் செல்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 24, 2023, 01:55 PM IST
  • சூரியன் பலமிழந்திருந்தால் சொந்தங்களால் தொல்லை, பணக்கஷ்டம், கடன் அவதி போன்ற பல பிரச்சனைகள் உண்டாகும்.
  • சூரியனின் மகாதிசைக்கான பரிகாரங்கள்.
  • சூரியனின் மகாதிசையின் பலன்கள்.
புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் சூரிய மஹாதிசை! பலன்களும் பரிகாரங்களும்!

ஜோதிடத்தில், கிரகப் பெயர்ச்சி, கிரகங்களின் சேர்க்கை போன்றே, கிரகங்களின் மகாதிசையும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் அரசனான சூரியனின் மகாதிசை 6 ஆண்டுகள் நீடிக்கும். வெற்றி, நம்பிக்கை, புகழ், ஆரோக்கியம் மற்றும் மரியாதையை தரும் கிரகம் சூரியன். ஜாதகத்தில் சூரியன் சுபமாக இருந்தால் 6 வருட மஹாதசை அற்புதமாக கடந்து செல்லும். இந்த நேரத்தில் ஜாதஜ்கர் தனது வாழ்க்கையில் உயரங்களைத் தொடுகிறார். மேலும் நிறைய பெயரும் புகழும் கிடைக்கும்.

சூரியனின் மகாதிசையின் பலன்கள்

ஜாதகத்தில் சூரியனின் நிலை நன்றாக இருந்தால், மகாதசையின் போது அந்த நபருக்கு நிறைய பெயர், பணம், புகழ் கிடைக்கும்.  ஜாதகர் எந்தத் துறையில் இருந்தாலும் அவருக்குப் பெரிய பதவி, பணம், கௌரவம், மகத்தான புகழ் கிடைக்கும். அவர் ஒரு பெரிய தலைவராக உருவாகும் நிலை ஏற்படும். அவர் வியாபாரத்தில் இருந்தால், அவரது வணிகம் எங்கும் பரவி வருமானம் பெருகும். அத்தகையவர்கள் அரசு வேலை, அரசியல் அல்லது நிர்வாகத்தில் இருந்தால், சூரியனின் மஹாதிசை அவர்களுக்கு உயர் அந்தஸ்தை அளிக்கிறது. நிர்வாகப் பதவிகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு சூரியனின் மகாதசை விரைவான வெற்றியைத் தரும்.

சூரியன் பலமிழந்திருந்தால் ஏற்படும் பாதிப்புகள்

மறுபுறம், சூரியன் பலமிழந்திருந்தால் சொந்தங்களால் தொல்லை, பணக்கஷ்டம், கடன் அவதி, வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகளால் பாதிப்பு , இடத்தை விட்டே செல்ல வேண்டிய நிலை, ஜாதகரின் தந்தைக்கு கண்டம் போன்ற பல பிரச்சனைகள் உண்டாகும். மேலும், தலைவலி, வயிற்றுவலி, இருதய நோய்கள், கண்களில் பாதிப்பு, காய்ச்சல் ஆகிய உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் சூரியனின் மகாதிசைக்கான பரிகாரங்களை செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! 2025 மார்ச் வரை சனியின் பிடியில் சிக்கித் தவிக்க போகும் ‘ராசி’ இது தான்!

சூரியனின் மகாதிசைக்கான பரிகாரங்கள்

- சூரியபகவானுக்கு தினமும் தண்ணீரை செம்புப் பாத்திரத்தில் எடுத்து வைத்து அர்ச்சனை செய்வதே சூரியனின் அருளைப் பெற சிறந்த வழியாகும். அக்ஷதை தண்ணீரில் கலந்தால் அதிக பலன் கிடைக்கும்.

- சூரியனின் மஹாதிசையின் போது அசுப பலன்களைத் தவிர்க்க 'ஓம் ராம் ரவயே நம' மற்றும் 'ஓம் க்ரினி சூர்யாய நம' என்ற மந்திரங்களை உச்சரிக்கவும்.

- ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோதுமை, வெல்லம் அல்லது தாமிரம் தானம் செய்வதன் மூலம், ஜாதகத்தில் சூரியனை பலப்படும். மேலும் சூரியனின் மஹாதசையின் போது தீய பலன்களிலிருந்து பாதுகாக்கிறது.

- தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும். இதனால் தன்னம்பிக்கை அதிகரித்து வேலையில் வெற்றிகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் சித்திரையில் ராஜ யோகத்தை அனுபவிக்க உள்ள ‘6’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News