சூரிய கிரகணம் அக்டோபர் 2022: நாட்டின் மிகப் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த முறை தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படும். மறுநாள் அக்டோபர் 25ம் தேதி இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழும். சூரிய கிரகணம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது, சூரியனின் ஒளி பூமியை அடையாத நிலை ஏற்படும். அது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி நள்ளிரவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கடைசி சூரிய கிரகணத்தின் போது, சூரியன் துலாம் ராசியில் இருக்கும். தீபாவளி பண்டிகை சமயத்தில் ஏற்படும் இந்த சூரிய கிரகணம் 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், 6 ராசிக்காரர்கள் அன்றைய தினம் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். அந்த 6 ராசிகள் எவை என்று பார்ப்போம்.
மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்!
ரிஷபம்:
சூரிய கிரகணத்தின் போது, ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அவர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும். இதனால், வருங்காலத்தில் ஏற்படும் சில நெருக்கடிகளை தவிர்க்கலாம்.
மேலும் படிக்க | Astro: 19 வருடங்கள் நீடிக்கும் சனி மகா திசை; சனியின் அருளைப் பெற செய்ய வேண்டியவை!
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களின் முக்கிய வேலைகள் தடை படலாம். திருமண உறவுகளில் விரிசல் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களை வாங்குவது உங்கள் வீட்டின் பட்ஜெட்டை பாதித்து, நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். குடும்ப பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பேச்சில் நடவடிக்கையில் கவன தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படும். அவர்களுக்கு பண இழப்பு ஏற்படலாம். எனவே, உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தவும். இந்த நேரத்தில் புதிதாக முதலீடு செய்ய வேண்டாம். இதனால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தின் தாக்கம் அதிகமாக தெரியும். இந்த ராசிகள் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பொதுவாக பொறுமையை கடைபிடிப்பது நல்லது. நிதானத்தை இழக்காமல் இருங்கள். இதனால் சில சிக்கல்களை தவிர்க்கலாம்.
துலாம்:
சூரிய கிரகணம் இந்த ராசிகளுக்கு சாதகமாக இல்லை. விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். சனி பகவானின் தாக்கத்தினால் சிக்கல்கள் ஏற்படலாம். மன உளைச்சல் ஏற்படும்.
கன்னி:
சூரிய கிரகணத்தின் போது உங்கள் வியாபாரம் மந்தமாகலாம். எனவே புதிதாக எந்த வேலையையும் தொடங்க வேண்டாம். கடனாக கொடுத்த பணத்தை இழக்கலாம். எனவே கவனமுடம் செயல்படுவது, வருங்கால நெருக்கடிகளை தவிர்க்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!
மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ