அக்டோபர் 28-ம் தேதி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் மூடப்படும்! தேவஸ்தானம் முடிவு

Tirumala Tirupati Devasthanam: அக்டோபர் 28-ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலை மூட திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 26, 2023, 09:54 PM IST
  • அக்டோபர் 28 சந்திர கிரகணம்
  • கிரகணம் முடிந்த பிறகு மதச் சடங்குகள்
  • சடங்குகளுக்கு பிறகு திருப்பதி கோவில் திறக்கப்படும்
அக்டோபர் 28-ம் தேதி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் மூடப்படும்! தேவஸ்தானம் முடிவு title=

திருப்பதி:  அக்டோபர் 28-ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவில் மூடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திருப்பதி பாலாஜி கோவில் கதவுகள் இரவு 7.05 மணிக்கு மூடப்படும். அக்டோபர் 28 அன்று, சூரிய கிரகணத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய மத சடங்குகளான சுத்தி மற்றும் புண்யாவாசனம் முடிந்த பிறகு, மறுநாள் அக்டோபர் 29 அதிகாலை 3:15 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். 

Tirumala Tirupati Devasthanam

அக்டோபர் 28-ம் தேதி நிகழவிருக்கும் பகுதி சந்திர கிரகணத்தையொட்டி மேல் திருப்பதியில் அமைந்துள்ள பெருமாள் கோவில் எட்டு மணி நேரம் மூடப்பட்டிருக்கும். இந்து பஞ்சாங்கத்தின் படி, அக்டோபர் 28 மற்றும் 29 இடைப்பட்ட இரவில் 1:05 மணி முதல் 2:22 மணி வரை கிரகணம் நிகழும்.

மேலும் படிக்க | சனி தோஷம் மட்டுமல்ல, ராகு கேது தோஷங்களையும் போக்கும் கருப்புக் கயிறு பரிகாரம்

கோவில் கதவுகள் இரவு 7.05 மணிக்கு மூடப்படும். அக்டோபர் 28 அன்று, சூரிய கிரகணத்திற்குப் பிந்தைய மத சடங்குகளான சுத்தி மற்றும் புண்யாவாசனம் முடிந்த பிறகு, பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில் திறக்கப்படும்.

கிரகணத்தையொட்டி, சஹஸ்ர தீபாலங்கார சேவை, மூத்த குடிமக்கள் மற்றும் சிறப்புக் குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம் ஆகியவற்றை TTD ரத்து செய்துள்ளது. மேலும், இதே விதிகள், பல்வேறு இடங்களில் அமைந்துள்ள திருப்பதி கோவில்களிலும் பின்பற்றப்படும். அதேபோல, மாலை 6:00 மணிக்குப் பிறகு அனைத்து அன்னதான நடவடிக்கைகளையும் நிறுத்தவும் முடிவு செய்துள்ளது. 

ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் நிகழ்கிறது. 28ஆம் தேதி நள்ளிரவில் நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் சில மணி நேரங்கள் தோஷமாக இருக்கும். சில ராசிகளில் பிறந்தவர்களுக்கும் தோஷமாகும். சந்திர கிரகண நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

மேலும்படிக்க | திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது!

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது ஏற்படும்  சந்திர கிரகணம், சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது நிகழும். இது முழு சந்திர கிரகணம் என்றால், பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.

2023ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் வரும் 29ஆம் தேதி நள்ளிரவில் தொடங்குகிறது. இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும் என்பதால் கிரகணம் தொடங்குவதற்கு 7 மணி நேரத்திற்கு முன்பாகவே தோஷ காலம் தொடங்குகிறது. கோவில்களில் நடை அடைக்கப்பட்டு விடும். கிரகணம் முடிந்த பிறகு கோவில்களில் சுத்தம் செய்து பரிகார பூஜைகள் முடிந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்பதன் அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ்வரும் அனைத்து கோவில்களும் மூடப்படுகிறது.

ஐப்பசி மாத பெளர்ணமி நாளில் நிகழும் சந்திர கிரகணம் அஸ்வினி நட்சத்திரத்தில் நிகழ்வதால் ரேவதி, அஸ்வினி, பரணி, ரோகிணி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தோஷம் உள்ளது. எனவே இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | திருப்பதி: பாதயாத்திரை சென்ற சிறுவனை தாக்கிய சிறுத்தை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News