தினசரி ராசிப்பலன் - இன்று அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள்!

தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? பிப்ரவரி 26, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 15, 2023, 06:02 AM IST
  • தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் அடைவீர்கள்.
  • குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள்.
  • பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.
தினசரி ராசிப்பலன் - இன்று அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள்! title=

இன்றைய ராசிப்பலன் - 15.03.2023

மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு சற்று சுமாராக இருக்கும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். உடன் பிறப்புகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் லாபம் அடைய முடியும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன குழப்பத்துடன் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க | சுக்கிரன் - செவ்வாய் அருளால் பங்குனியில் பட்டையை கிளப்ப போகும் ‘5’ ராசிகள்!

மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கொடுத்த கடன் வசூலாகும். 

கடகம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.

சிம்மம்
இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

கன்னி
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

துலாம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.

விருச்சிகம்
இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மன சங்கடங்கள் ஏற்படலாம். உறவினர்களிடம் ஏற்படும் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள்.

தனுசு
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை கூடும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும்.

மகரம்
இன்று நீங்கள் குடும்பத்தில் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருளாதார நிலை பாதிப்படையாது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
 
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் பணிசுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கணித்தவர்

முனைவர் முருகு பால முருகன்,
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Cell: 0091 7200163001, 9383763001.

மேலும் படிக்க | சனிபெயர்ச்சி: மண வாழ்க்கை முதல் தொழில் வரை இந்த ராசிகளுக்கு கூடுதல் ஜாக்பாட்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News