யாருக்கு எந்த நவரத்தினம் அதிர்ஷ்டத்தை தரும்? யாரெல்லாம் வைரம் அணியக்கூடாது?

Boost Navagraha With Navarathna : இந்து கலாசாரத்தில் ஒன்பது என்ற எண்ணுக்கு மிகவும் முக்கியமான இடம் உண்டு. கிரகங்கள் ஒன்பது என்பதால், நவகிரகங்கள் என்று சொல்கிறோம்.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 19, 2024, 11:34 PM IST
  • ஒன்பது என்ற எண்ணின் முக்கியத்துவம்
  • ஒன்பது வகையான ரத்தினங்கள்
  • நவரத்தினங்களும் நவகிரகங்களும்...
யாருக்கு எந்த நவரத்தினம் அதிர்ஷ்டத்தை தரும்? யாரெல்லாம் வைரம் அணியக்கூடாது? title=

விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வார்கள். ஆனால், ஜோதிட சாஸ்திரப்படி, நவகிரகங்களை கட்டுப்படுத்தவும் வழி உண்டு. ஒருபுறம் தெய்வ வழிபாடு என்றால், வேறு வழிகளில் நவரத்தினங்களை ராசிக்கு ஏற்றாற்பொல அணிவது என்று சொல்லலாம். எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ரத்தினம் ஒத்துவரும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பவளம் அணியவேண்டும். மனதிலுள்ள தீய எண்ணங்களை அழித்து தெய்வ சிந்தனையைத் தரும் பவளம், செவ்வாய் திசை உள்ளவர்களுக்கும் நன்மைகளை அதிகமாக செய்யும். சீற்றத்தை கொடுத்து அன்பை அதிகரிக்கும் பவளத்தை மேஷ ராசியினர் பயன்படுத்தினால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

ரிஷபம் 
ரிஷிப ராசிக்காரர்கள் வைரம் அணிவதால், அவர்களுடைய தோற்றப்பொலிவு கூடும். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழிலில் விருத்தி ஏற்படும். சுக்கிர திசை உள்ளவர்கள் வைரம் அணிவது நல்லது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மரகதம் அணிவது அவர்களின் புத்திக்கூர்மையை அதிகரிக்கும். வாக்கு சாமர்த்தியமும் அதிகரிக்கும்.  எடுத்த எல்லா காரியங்களிலும் வெற்றி ஏற்படும். மேலும் மரகதம், மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் நேர்மறையான எண்ணங்களையும் உருவாக்கும். புதன் திசை நடப்பவர்களும் மரகதத்தை அணியலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் முத்து அணியலாம். மனதில் எழும் தேவையில்லாத சந்தேகங்களை நீக்கி தெளிவைக் கொடுக்கும். செல்வ வளத்தை கடக ராசிக்காரர்களுக்குக் கொடுக்கும் முத்து, தொழில் விருத்தி, தன, தானிய விருத்தி என நல்ல பலன்களைக் கொடுக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | லட்சுமியின் அருளைப் பெற சிவனுக்கு அபிஷேகம் செய்யாலாம்! இது பெளர்ணமி சிவ வழிபாடு!

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கத்தை அணியலாம். உணர்ச்சிக் கொந்தளிப்புகளை கட்டுப்படுத்த மாணிக்கம் உதவியாக இருக்கும். தீய எண்ணங்களைக் கொண்ட நண்பர்களின் தொடர்புகள் நின்றுபோகும். மாணிக்கம் அணிந்தால், சிம்ம ராசியினரின் உடல் நலம் மேம்படும். அதிலும் குறிப்பாக சூரிய திசை நடப்பவர்கள் மாணிக்கம் அணிவது மிகவும் நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மரகதத்தை அணிந்து தெய்வ கடாட்சியத்தைப் பெறலாம். வளமான வாழ்வினைக் கொடுத்து, குடும்ப விருத்தி கணவன், மனைவியிடையே அன்பு அந்நியோந்நித்தைஅதிகரிக்கும்மரகதத்தை சுக்கிர திசைக்காரர்கள் அணிவது மனவலிமையை அதிகரிக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வைரம் அணிந்தால் குடும்ப சிக்கல்கள் தீரும். மன திடத்தை அதிகரிக்கும், பேச்சுத்திறனை மேம்படுத்தும். ஆரோக்கியமும், உடல் வலிமையும் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பவளம் அணிவது ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும். வாக்குவன்மையைக் கொடுத்து, தெய்வ அனுகூலத்தையும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால், செய்யும் வேலையை துணிச்சலாக செய்து பதவி உயர்வு பெறலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கனக புஷ்பராகம் மிகவும் நல்லது. குரு திசை உள்ளவர்கள் கனக புஷ்பராகம் அணிவது விருத்தியைக் கொடுக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். மனக்குழப்பங்கள் தீரும்.

மேலும் படிக்க | ராகுவின் உத்திரட்டாதி நட்சத்திரப் பெயர்ச்சியால் ஜாக்பாட் லாபம் அடையும் 3 ராசிகள்!

மகரம்
மகர ராசிக்காரர்கள் நீலக்கல் அணிவது நல்லதாக இருக்கும். செல்வாக்கு உயரும். சமுக அந்தஸ்து அதிகரிப்பது, பொருளாதார முன்னேற்றம் என நல்ல பலன்கள் கிடைக்கும். மனத்தெளிவு பிறக்கும். குடும்ப உறவுகள் வலுப்படும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நீலக்கல் நன்மைகளைக் கொடுக்கும். வம்சத்தை விருத்தியாக்கும் நீலக்கல், காரியத்தடைகளை நீக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் அமையும். வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பேச்சாற்றல் பெருகும். 

மீனம்
மீன ராசிக்காரர்கள் கனக புஷ்பராகம் அணிய வேண்டும். கோபத்தைக் குறைத்து மன அமைதியைத் தரும் கனக புஷ்பராகம் அணிவதால் மீன ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். வாகனம் வாங்குவது மற்றும் வீடு வாங்கும் யோகம் கிட்டும். தோற்றப்பொலிவு கூடும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் உதயம்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உதயமாகும்... மகிழ்ச்சியும், செல்வமும் அதிகமாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News