ஜோதிடத்தில், ராசியின் அடிப்படையில் ஒரு நபரைப் பற்றி பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம், எந்தவொரு நபரின் ஆளுமையையும் அறிய முடியும். ஒவ்வொரு ராசிக்கும் உள்ள அதிபதி கிரகங்கள், அதன் தாக்கம் ஆகியவை அந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் தெளிவாக தெரியும். கோள்களுக்கிடையே பகை, நட்பு போன்ற உணர்வும் ஏற்படுவதால், அதன் அடிப்படையில் இரு ராசிக்காரர்களுக்கும், இடையில் எந்த அளவிற்கு மனம் ஒத்துப் போகும் என்பதைக் கூறலாம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் திருமணத்திற்கு ராசி பொருத்தம் உள்ளதா என்பதை அறிந்து கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் ராசி கிரகங்களுக்கும் உங்கள் ராசி கிரகங்களுக்கும் இடையே பகை உணர்வு இருந்தால், இருவருக்கும் மனம் ஒத்துப் போகாது அல்லது பொருத்தம் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். எந்த ராசிக்காரர்கள் உங்களுக்கு சிறந்த வாழ்க்கை துணையாக இருப்பவர்கள் குறித்து ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் நல்ல வாழ்க்கைத் துணையாக விளங்கலாம்.
ரிஷபம்: மகரம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு ரிஷபம், துலாம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்கள் நல்ல வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள்.
கடகம்: கடக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையாக சிம்மம், மேஷம் அல்லது தனுசு ராசிக்காரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு தனுசு ராசிக்காரர்கள் சிறந்த துணையாக இருப்பார்கள். இது தவிர, கடகம், மேஷம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகியவற்றிலிருந்தும் வாழ்க்கத் துணையைத் தேர்ந்தெடுக்கலாம்.
கன்னி: கன்னி ராசியினருக்கு மகரம் அல்லது ரிஷபம் ராசிக்காரர்கள் நல்ல துணையாக விளங்கலாம்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சிறந்த துணை கும்பம் ராசிக்காரர்கள் என்றாலும் மேஷம், மிதுனம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்களும் சிறந்த துணையாக இருப்பார்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு ரிஷபம், தனுசு, கடகம், மீனம் ராசிக்காரர்கள் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருக்க முடியும்.
தனுசு : தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது, சிம்மம் மற்றும் மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
மகரம்: விருச்சிக ராசிக்காரர்கள் மகர ராசிக்காரர்களுக்கு நல்ல துணையாக இருப்பார்கள். இது தவிர ரிஷபம், மிதுனம், கடகம், துலாம் ராசிக்காரர்களுடனும் நல்ல பந்தம் இருக்கும்.
கும்பம்: கும்பம் ராசிக்காரர்களான சிம்மம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்களில் உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்கள்.
மீனம்: கடகம், மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ