“கோவமடைந்து பீமர் போட்டேன், பின்னர் தோனியிடம் மன்னிப்புக் கேட்டேன்” ஒப்புக்கொண்ட அக்தர்!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது பீமர் பந்து போட்டதற்கு தான் வருந்துவதாக ஒப்புக்கொண்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2020, 03:44 PM IST
  • தோனி 2006 ல் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, பைசலாபாத்தில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார்.
  • முதல் இன்னிங்சில் பாகிஸ்தானின் 588 ரன்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அணி 603 ரன்கள் எடுத்திருந்தது.
  • நான் எவ்வளவு வேகமாக பந்து வீசினாலும் அவர் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தார் – அக்தர்.
“கோவமடைந்து பீமர் போட்டேன், பின்னர் தோனியிடம் மன்னிப்புக் கேட்டேன்” ஒப்புக்கொண்ட அக்தர்!! title=

புது தில்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் (Shoaib Akhtar), முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி (Mahindra Singh Dhoni) மீது பீமர் பந்து போட்டதற்கு தான் வருந்துவதாக ஒப்புக்கொண்டார்.

2006 இல், இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தில் பைசலாபாத் டெஸ்டின் போது, ​​தோனியின் அதிரடி ஆட்டத்தால் அக்தர் பதற்றமடைந்து அவருக்கு ஒரு பீமரை, அதாவது ஆபத்தான ஒரு பந்தை போட்டார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 2006 ல் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, பைசலாபாத்தில் (Faizlabad) தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். 19 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் அவர் அடித்த 148 ரன்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றின. அக்தரின் ஒரு ஓவரில் தோனி மூன்று பவுண்டரிகளை அடித்தார். இதனால் கோவமடைந்த அக்தர், ஆபத்தான் பீமரை அவர் மீது வீசினார். முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ராவுடன் பேசிய பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், "பைசலாபாத்தில் நான் 8 அல்லது 9 ஓவர்களுக்கான ஸ்பெல்லை போட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். அது மிகவும் வேகமான ஸ்பெல்லாக இருந்தது. தோனி அபாரமாக ஆடி சதம் அடித்தார். நான் வேண்டுமென்றே தோனியை நோக்கி ஒரு பீமரை போட்டேன். அதன் பிறகு அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டேன்” என்று கூறினார்.

ALSO READ: 'ஜெய் ஸ்ரீ ராம்,' என்று தெரிவித்த பாகிஸ்தானின் இந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்....'

முதல் இன்னிங்சில் பாகிஸ்தானின் 588 ரன்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அணி 603 ரன்கள் எடுத்திருந்தது. இந்த போட்டியில், இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர் தோனி. ராகுல் டிராவிட் 103 ரன்களும், தோனி 148 ரன்களும் எடுத்தனர்.

“நான் பீமர் போட வேண்டும் என்று முடிவெடுத்து போட்டது அதுதான் என் வாழ்வில் முதல் முறை. நான் அதை செய்திருக்கக்கூடாது. இது குறித்து நான் மிகவும் வருந்தினேன். அவர் மிகவும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். விக்கெட் மிகவும் மெதுவாக இருந்தது. நான் எவ்வளவு வேகமாக பந்து வீசினாலும் அவர் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தார். நான் ஏமாற்றமடைந்து, அந்த ஏமாற்றத்தின் விளைவால் வந்த கோவத்தால் அப்படி செய்தேன் என நான் நினைக்கிறேன்." என்று அக்தர் கூறினார்.

ALSO READ: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை ஆஸ்திரேலியா ஒத்திவைத்தது

Trending News