இரானி கோப்பை கிரிக்கெட் அணி தலைவராக ரஹானே நியமனம்!

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் Rest of India அணியின் தலைவராக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்!

Updated: Feb 7, 2019, 09:38 PM IST
இரானி கோப்பை கிரிக்கெட் அணி தலைவராக ரஹானே நியமனம்!
Pic Courtesy: twitter/@BCCI

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் Rest of India அணியின் தலைவராக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற விதர்பா அணியும, Rest of India அணியும் மோதும் இரானி கோப்பை போட்டிகள் வரும் 12-ஆம் நாள் துவங்கி 16-ஆம் நாள் வரை நாக்பூரில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் Rest of India அணியின் தலைவராக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணியும், Rest of India அணியும் இரானி கோப்பை போட்டியில் மோதுவது வழக்கம்.

இந்நிலையில் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி இன்றுடன் முடிவடைந்தது. இப்போட்டியில் சவுராஷ்டிராவை வீழ்த்தி விதர்பா தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கிடையில் தற்போது Rest of India அணி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள அணிக்கு ரஹானே அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன் கீப்பராக இடம்பெற்றுள்ளார். 

Rest of India அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரஹானே, 2. மயாங்க் அகர்வால், 3. அன்மோல்ப்ரீத் சிங், 4. ஹனுமா விஹாரி, 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. இஷான் கிஷன், 7. கிரிஷ்ணப்பா கவுதம், 8. தர்மேந்த்ரசின் ஜடேஜா, 9. ராகுல் சாஹர், 10. அங்கித் ராஜ்பூட், 11. தன்வீர் உல்-ஹக், 12. ரோனிட் மோர், 13. சந்தீப் வாரியர், 14. ரிங்கு சிங், 15. ஸ்னெல் பட்டேல்.