14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய ஆசிய தொடர், இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்த ஆண்டு நடைபெற்று ஆசியா தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் என மொத்தம் ஆறு அணிகள் மோதின. இந்த அணிகள் "ஏ" மற்றும் "பி" என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங், "பி" பிரிவில் இலங்கை, வங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றன.
இதில் அடுத்த நிலையான "சூப்பர் 4 சுற்று"க்கு இந்தியா, பாகிஸ்தான், வங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் முன்னேறின. இதில் முதல் இரண்டு இடங்களை பெற்ற இந்தியா, வங்களாதேஷ் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.
இன்று நடைபெறும் இறுதிபோட்டியில் இந்தியா, வங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இந்த ஆண்டுக்கான ஆசியா கோப்பை தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 21) மோதின. அந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளில் நான்கு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டி டிராவும் ஆனது. அதேபோல வங்களாதேஷ் அணி விளையாடிய 5 போட்டிகளில் மூன்று வெற்றியும், இரண்டு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.
#TeamIndia has won the #AsiaCup the most number of times with six victories.
Will the #MenInBlue clinch their seventh #AsiaCup title today #INDvBAN #AsiaCup2018 pic.twitter.com/BMHtjDqa9F
— BCCI (@BCCI) September 28, 2018
இந்நிலையில், இன்று இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனல் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.