ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ஷ்டம் அடித்தது. டாஸில் வென்ற ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். கடைசியாக இந்த மைதானத்தில் இரு அணிகளும் மோதிக் கொண்ட 20 ஓவர் உலகக்கோப்பை, இந்திய அணி டாஸில் தோல்வியை தழுவி, போட்டியிலும் தோல்வியடைந்தது. இதன்பிறகு இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கும் போட்டி என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் போட்டியை எதிர்பார்க்க, எந்த எதிர்பார்ப்புக்கு எந்த பஞ்சமும் இல்லாமல் போட்டி நிறைவடைந்திருக்கிறது.
மேலும் படிக்க | IND vs PAK: தேசிய கொடியை வாங்க மறுக்கும் ஜெய் ஷா! வைரலாகும் வீடியோ!
டாஸில் தோல்விடைந்த பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங் இறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோர் துல்லியமாக பந்துவீசி அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க, பாபர் அசாம் 10 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி நெருக்கடிக்கு உள்ளானது. இதனால் 20 ஓவர் முடிவில் 147 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது.
Take a bow #HardikPandya
Congratulations Team India for Yet another victory over Pakistan. #INDvsPAK #AsiaCup2022 pic.twitter.com/ZWtcn1rPxj— Shubhankar Mishra (@shubhankrmishra) August 28, 2022
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக பந்துவீசி கடும் நெருக்கடி கொடுத்தனர். நசீம், ராஃப் என அடுத்தடுத்த வேகக்கணைகள் தொடுக்க இந்திய அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது. விராட் கோலி மட்டும் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டரில் ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றிக்கு அருகாமையில் அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரில் ஜடேஜா ஆட்டமிழக்க, பரபரப்பு ஏற்பட்டது. களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்து பாண்டியாவுக்கு ஸ்டிரைக் கொடுத்தார். அப்போது, அந்த பாலை டாட் செய்தார் பாண்டியா.
Beautiful Moment in India Vs Pak Match Today. Dinesh Karthik bowed before Hardik Pandya. Well done Team India. #INDvsPAK #IndiaVsPakistan #IndianCricketTeam #HardikPandya #DineshKarthik #AsiaCup2022 pic.twitter.com/vuro2ZXd7H
— Tarique Anwer (@tariqueSH) August 28, 2022
அந்த பந்துக்குப் பிறகு தினேஷ் கார்த்திக்கை பார்த்த பாண்டியா, கூலாக ஒரு ரியாக்ஷன் கொடுத்துவிட்டு அடுத்த பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். அதன்பின், ஹர்திக் பாண்டியாவின் அருகில் சென்ற தினேஷ் கார்த்திக் பாண்டியாவுக்கு தலைவணங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | IND vs PAK: ’அந்த தவறு இந்த முறை நடக்காது’ இந்தியாவின் ’கேம்’ பிளான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ