Asia Cup 2023 Date: நினைத்ததை சாதித்த இந்தியா... ஆசிய கோப்பை நடக்கும் இடங்கள் அறிவிப்பு!

Asia Cup 2023 Date and Venue Announced: ஆசிய கோப்பை 2023 தொடர் நடைபெறும் இடம் குறித்து நீண்ட நாளாக பிரச்னை இருந்த நிலையில், தற்போது போட்டிகளின் தேதி மற்றும் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 15, 2023, 05:56 PM IST
  • ஆசிய கோப்பை தொடரில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறுகிறது.
  • ஆறு அணிகள் இரண்டு பிரிவுகளாக முதல் சுற்றில் மோத உள்ளன.
  • ஆக. 31ஆம் தேதி முதல் செப் 17ஆம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது.
Asia Cup 2023 Date: நினைத்ததை சாதித்த இந்தியா... ஆசிய கோப்பை நடக்கும் இடங்கள் அறிவிப்பு! title=

Asia Cup 2023 Date and Venue Announced: ஆசிய கோப்பை குறித்து, ஆசிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆசிய கோப்பை 2023 தொடர் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 2023 வரை நடைபெறும் என்றும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் உயரடுக்கு அணிகள் மொத்தம் 13 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மொத்தம் 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள் என்றும் பின்னர், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிப்பவர்கள் Super Four சுற்றுக்கு தகுதிபெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றிபெறுபவர்கள் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என தெரிகிறது.

இதில், நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், எஞ்சிய ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் இந்த போட்டி கலப்பின மாதிரியில் நடத்தப்படும் என ஆசிய கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கிறது. 

மேலும் படிக்க | இவர்களுக்கு ஓய்வு தான் கரெக்ட்... சீனியர் வீரர்களை கழட்டிவிட சொல்லும் ஹர்பஜன்!

இந்த தொடரை பாகிஸ்தானில் நடத்தினால் இந்திய அணி அதில் பங்கேற்காது எனவும், எனவே பொதுவான நாடுகளில் போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதியாக இருந்தது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே பல கருத்து போர்கள் நடந்தன. இதனால், போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என கூறப்பட்டது. பல கட்ட முயற்சிகளுக்கு பின் தற்போது இந்த தொடரின் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், மற்ற 9 போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. 

மேலும், இந்தியாவில் இந்தாண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த 50 ஓவர் ஆசிய கோப்பை தொடர் முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணி ஒரே பிரிவில் இடம்பெறும் என கூறப்பட்டது. கடந்தாண்டு நடைபெற்ற டி20 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி, இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | TNPL: ஒரே பந்தில் 18 ரன்னா... அது எப்படி ? - இதோ வீடியோவை பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News