இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இருந்து வந்த சீன ஸ்மார்ட்போன் நிறுவனம், ஓப்போ நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஸ்பான்சராக பைஜூ நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது!
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்தியா கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக ஓப்போ நிறுவனம் இருந்து வந்தது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி இந்தியாவில் நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய அணியின் ஜெர்சிகளில் ஓப்போ நிறுவனத்தின் லோகோ இடம்பெறாது எனவும், அதற்கு பதிலாக இந்தியாவின் தொழில்நுட்ப ஆன்லைன் டியூட்டோரியல் நிறுவனமான பைஜூ நிறுவனத்தின் பெயர் இடம்பெறும் எனவும் BCCI அறிவித்துள்ளது.
2017-ஆம் ஆண்டு ‘ஓப்போ’வுடன் மேற்கொண்ட 5 ஆண்டுகால ஒப்பந்தம் ரூ.1079 கோடி மதிப்புடையது. இந்த மாற்றம் மும்முனை ஒப்பந்தம் அடிப்படையில் ஓப்போ பைஜூக்கு மாறுகிறது. அதாவது ஓப்போ- பைஜூ - BCCI ஆகியோரிடையே இன்று ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி தொடர்பான செயலி நிறுவனமான 'பைஜூ' முறைப்படி இந்திய அணியின் ஸ்பான்சராவதற்கான அதிகாரபூர்வமாக ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது.
UPDAT : BYJU'S to be new #TeamIndia sponsor
More details - https://t.co/OXgn45kYrJ pic.twitter.com/Xmxt2VAZ5q
— BCCI (@BCCI) July 25, 2019
மேலும், Bilateral Series-களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.4.61 கோடியும், ICC தொடர்களின் ஒரு போட்டிக்கு 1.56 கோடி ரூபாயும் BCCI-க்கு இதுவரை செலுத்தி வந்தது ஓப்போ நிறுவனம். இந்தியா அணி விளையாடும் போட்டிகளை ஒளிப்பரப்பும் உரிமையை பெற்றுள்ள ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒரு போட்டிக்கு தலா ரூ.1.92 கோடியும், ICC தொடரின் ஒரு போட்டிக்கு 61 லட்சம் ரூபாயை BCCI-க்கு செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
BCCI-ன் அறிவிப்பின் படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்திய அணி ஓப்போ பெயர் பாதிக்கப்பட்ட ஜெர்சிக்கு பதிலாக 'பைஜூ' நிறுவனத்தின் பெயர் பதிக்கப்பட்ட ஜெர்சி அணிந்தே விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.