விளையாட்டுச் செய்திகள்: ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் இறுதியில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பல அணிகள் தங்களின் 15 பேர் கொண்ட ஸ்குவாடை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் ஸ்குவாட் குறித்த எதிர்பார்ப்பு சமீப நாள்களாக எகிறி வந்தது. ஆசிய கோப்பை படுதோல்வி, அணித் தேர்வில் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். கிரிக்கெட் வல்லுநர்கள் தொடங்கி மூத்த வீரர்கள் வரை வழக்கம்போல் தங்களின் ஆருடங்களையும் சொல்லி வந்தனர்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி, இன்று மாலை அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை ஸ்குவாட்டில் இருந்து தற்போது அறிவிக்கப்பட்ட ஸ்குவாடில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை. காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகிய ஜடேஜா, ஆவேஷ் கான் ஆகியோர் தற்போதைய ஸ்குவாட்டில் இடம்பெறவில்லை. மேலும், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
மேலும் படிக்க | அவரை சேர்த்தால் பலன் கிடைக்கும் - இந்திய அணிக்கு யோசனை கூறும் சுனில் கவாஸ்கர்
One title
One goal
Our squad #TeamIndia | #T20WorldCup pic.twitter.com/Dw9fWinHYQ— BCCI (@BCCI) September 12, 2022
முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பீஷ்னோய், தீபக் சஹார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் பிரதான அணியில் இடம் கிடைத்துள்ளது. உலக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது முதல் ரசிகர்கள் ஷமி, சாம்சன் ஆகியோரை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவின் ட்வீட் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அவர்,'ஐபிஎல் தொடருக்கு பிறகு முகமது ஷமிக்கு அணியலி இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்து, பிளேயிங் லெவனுக்கான போட்டியில் அவருக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம்' என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
I wish the team had allowed itself to see a little more of Mohd Shami after the IPL to allow him to challenge for a place in the XI.
— Harsha Bhogle (@bhogleharsha) September 12, 2022
அவர் மட்டுமின்றி ரசிகர்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். முகமது ஷமியை அணியில் எடுக்காதது மூலம், இந்திய மிகப்பெரும் தவறை செய்துள்ளது என ஒருவர் ட்வீட் போட்டுள்ளார்.
உலக கோப்பை அணி மட்டுமின்றி இம்மாதம் நடைபெறும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்குமான இந்திய அணியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்களின் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரு தொடருக்கான அணிகளில் முகமது ஷமி இடம்பெற்றுள்ளார். ஆனால், நட்சத்திர பேட்டர் சஞ்சு சாம்சனுக்கு எந்த தொடரிலும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனையும் நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.
Is this the backing Sanju samson got
Rohit betrayed him #SanjuSamson #justice pic.twitter.com/vmm5EfbvnQ— M. (@VK__GoatI8) September 12, 2022
இந்திய ஸ்குவாட்
உலகக்கோப்பை அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
காத்திருப்பு வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.
Have some shame ignore Samson and picking Undeserving players..this is why we never won trophies since 2013 pic.twitter.com/crRgoFg1t3
— Anurag (@RightGaps) September 12, 2022
ஆஸ்திரேலிய தொடருக்கான அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
தென்னாப்பிரிக்கா தொடருக்கான அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
மேலும் படிக்க | ஷிகர் தவான் vs ரோகித் சர்மா; மீண்டும் மாறும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு