India National Cricket Team: இந்தியா - தென்னாப்பிரிக்கா (IND vs SA Test Series) அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (டிச. 26) முதல் தொடங்க உள்ளது. சென்சூரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்க உள்ள போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியை சந்திக்க இருக்கிறது.
திரும்பி வரும் மூத்த வீரர்கள்
இந்திய அணி (Team India) தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை என்ற காரணத்தால் தற்போதைய ரோஹித் & கோ மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. தற்போதைய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, அஸ்வின் உள்ளிட்டோர் ஐசிசி உலகக் கோப்பைக்கு பின் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பி உள்ளனர். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருந்த இவர்கள் கடந்த சில நாள்களாக கடுமையான பயிற்சியில் உள்ளனர்.
ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர் குழு இவர்களை முழுமையாக கண்காணித்து வருகிறது. ரோஹித் உடன் ஜெய்ஸ்வால் ஓப்பனிங் இறங்குவார் என்பதும், கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்பதும் ராகுல் டிராவிட்டின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பும், பயிற்சிகளை பார்த்தவர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.
மேலும் படிக்க | Cricket Controversies 2023: இந்த ஆண்டில் கிரிக்கெட் களத்தில் நடைபெற்ற சர்ச்சைகள்
செய்தியாளரின் கேள்வி
இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma Captaincy) இந்திய நேரப்படி இன்று மதியம் சென்சூரியனில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், உலகக் கோப்பை தோல்வியில் இருந்து அவரும், அணி வீரர்கள் எவ்வாறு மீண்டு வருகிறார்கள், இந்த டெஸ்ட் தொடரை எப்படி எதிர்கொள்ள இருக்கின்றனர், அவரின் கிரிக்கெட் எதிர்காலம் என பல கேள்விகளுக்கு தெளிவாக விளக்கம் அளித்தார்.
குறிப்பாக டி20 உலகக் கோப்பையில் (ICC T20 World Cup 2024) அவர் விளையாடுவாரா என்பதற்கு ரோஹித் சர்மா பூடகமாக பதில் அளித்துள்ளார். செய்தியாளர் ஒருவர் ரோஹித் சர்மாவிடம், "உலகக் கோப்பை தோல்வியின் காரணமாக 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என உங்களுக்கு தோன்றுகிறதா" என கேள்வி எழுப்பினார்.
ரோஹித் சர்மாவின் சாமர்த்தியம்
"அனைவருக்கும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எல்லோரும் விளையாட விரும்புகிறார்கள், எல்லோரும் நன்றாக விளையாடி வெல்ல விரும்புகிறார்கள். எங்கே வாய்ப்புக் கிடைத்தாலும் சிறப்பாகச் செயல்பட விரும்புவார்கள். நீங்கள் இங்கே என்ன கேட்கிறீர்கள் என்று எனக்குத் தெரிகிறது, உங்கள் பதிலை விரைவில் பெறுவீர்கள்" என தெரிவித்தார். ரோஹித் சர்மாவின் பதிலை அடுத்து அங்கு சிரிப்பலை எழுந்தது.
Question: When you talk about desperation to win, do you mean the T20 WC?
Rohit Sharma said "Whenever the boys get the opportunity, they have to perform. I know what you are trying to say, you will get the answer soon". [Smiles] pic.twitter.com/YtobuItLE6
— Johns. (@CricCrazyJohns) December 25, 2023
அதாவது, கோப்பையை வென்றே ஆக வேண்டும் என விரக்தியில் நீங்கள் டி20 உலகக் கோப்பையிலும் பங்கேற்பீர்களா என்பதை மறைமுகமாக கேட்க, அதனை புரிந்துகொண்ட ரோஹித் சர்மா, விரைவில் அதற்கான பதிலை பெறுவீர்கள் என தெரிவித்தார். அதன்மூலம், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ரோஹித்
ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், டி20 அணி கேப்டனாக ரோஹித் மீண்டும் என்ட்ரி கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு பின் சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் விளையாடவில்லை. வரும் ஜனவரியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டி நடைபெற இருப்பதால் ரோஹித் அதில் என்ட்ரி கொடுக்க வாய்ப்புள்ளது.
ஆப்கான் தொடருக்கு பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின், ஐபிஎல் தொடர் நடைபெறும். ஐபிஎல் தொடருக்கு பின்னரே டி20 உலகக் கோப்பை ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன்ஸியில் இருந்து ரோஹித் விடுவிக்கப்பட்டாலும், அவருக்கான மவுஸ் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ