India National Cricket Team: கிரிக்கெட் உலகம் தற்போது தினந்தினம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்கிறது. காரணம் தற்போது பல்வேறு நாடுகளில் டெஸ்ட் தொடர்களில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற பல்வேறு அணிகளும் தற்போது முட்டிமோதி வருகின்றன. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அட்டவணை கூடிய விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி - மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், மார்ச் தொடங்கி மே மாத கடைசி வரை ஐபிஎல் தொடரும் நடைபெற இருக்கிறது. இதையடுத்து ஜூன் மாதத்தில்தான் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. எனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்னரே இறுதிப்போட்டிக்கு எந்தெந்த அணிகள் தகுதிபெறும் என்பதும் தெரிந்துவிடும்.
முட்டிமோதும் நான்கு அணிகள்
தற்போது ஆஸ்திரேலியா - இந்தியா, தென்னாப்பிரிக்கா - இலங்கை, நியூசிலாந்து - இங்கிலாந்து என முன்னணி அணிகளின் டெஸ்ட் தொடர்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கடுத்து, தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான், இலங்கை - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களும் முறையே டிசம்பர், ஜனவரியில் நடைபெற இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிபெற முட்டிமோதி வருகின்றன.
மேலும் படிக்க | ஐபிஎல் 2025 ஏலத்தில் தனித்துவமான சாதனை படைத்துள்ள அர்ஜுன் டெண்டுல்கர்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தற்போது முறையே முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. 2023-15 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் அனைத்து தொடர்களும் நிறைவடைந்த பின்னர் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். அந்த வகையில், தற்போதைய சூழலில் இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் எத்தனை போட்டிகளை வெற்றிபெற வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற...
1. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 4 போட்டிகளை வென்றாலே நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிடும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 5-0, 4-0, 4-1, 3-0 என இந்தியா வெற்றிபெற்றுவிட்டால் இந்திய அணிக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது. அதாவது, இந்தியாவின் தற்போதைய PCT 61.11 ஆக உள்ளது. இதே நான்கு போட்டிகளை வென்றுவிட்டால் 64.04 ஆக இருக்கும். புள்ளிப்பட்டியலில் முதலிடத்துடன் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்லும்.
2. ஒருவேளை, தென்னாப்பிரிக்கா பாகிஸ்தானுக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வென்றுவிட்டு, இலங்கையுடன் ஒரு போட்டியில் தோற்றால் கூட அந்த அணியின் PCT 61.11 ஆக இருக்கும். அதே நேரத்தில் இலங்கையையும் 2-0 என்ற கணக்கில் வென்றால் PCT 69.44 ஆக இருக்கும். இதனால் தென்னாப்பிரிக்கா முதலிடத்திற்கும் இந்தியா இரண்டாமிடத்திற்கும் செல்லும்.
3. இந்தியா ஆஸ்திரேலிய அணியை 3-1 என்ற கணக்கில் தொடரை முடிக்கும்பட்சத்தில், வரும் டிச.5ஆம் தேதி தொடங்கும் போட்டியில், தென்னாப்பிரிக்கா இலங்கையிடம் வெற்றிப் பெறக்கூடாது என இந்தியா வேண்டிக்கொள்ள வேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலியா இலங்கை சென்று இரண்டு போட்டிகளையும் வென்றுவிட்டால் இந்தியாவின் நிலைமை சிக்கல் ஆகிவிடும். மறுமுனையில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய தொடரை முடித்தால் இலங்கை அணி குறைந்தபட்சம் ஒரு போட்டியையாவது டிரா செய்ய வேண்டும் என இந்தியா வேண்டிக்கொள்ள வேண்டும்.
4. ஒருவேளை இந்தியா 2-2 என்ற கணக்கில் தொடரை முடித்தால் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். இந்த சூழலில் தென்னாப்பிரிக்கா இலங்கையை 2-0 என்ற கணக்கில் வென்றிருக்க வேண்டும். அதேநேரத்தில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். எனவே, இத்தனை சாத்தியங்கள் இருந்தாலும் எந்த அணியின் வெற்றி, தோல்வியையும் நம்பாமல் இந்தியா நேரடியாக செல்ல அடுத்து வரும் 4 டெஸ்ட் போட்டிகளில் 3இல் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். எதிலும் தோல்வியடைய கூடாது.
மேலும் படிக்க | 6 பந்துகளில் 4 விக்கெட் எடுத்த ஹர்ஷித் ராணா! இனி இந்த வீரருக்கு வாய்ப்பு கம்மிதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ