உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: அரையிறுதியில் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 23, 2019, 11:24 PM IST
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: அரையிறுதியில் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் நகரில் 25 வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் அமெரிக்கா வீராங்கனை பெய்வென் ஜாங்கை 21-14, 21-6 என்ற செட்களில் வீழ்த்தி பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினர். 

இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலக நம்பர் 2 இடத்தில் இருக்கும் தைவான் வீராங்கனை டைசூ யிங்கை 12-21, 23-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. ஒரு மணி நேரம் நீடித்த பெண்கள் ஒற்றையர் போட்டியின் விறுவிறுப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து.