’மைதானத்தில் நடந்த களேபரம்’ சிறுவனிடம் மொக்கை வாங்கிய மும்பை ரசிகர்கள்

மும்பை - சிஎஸ்கே போட்டியின்போது சிறுவனிடம் மும்பை ரசிகர்கள் மொக்கை வாங்கிய வீடியோ வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 24, 2022, 03:50 PM IST
  • ரோகித் படையை வீட்டுக்கு அனுப்பிய தோனி
  • மைதானத்திலேயே மொக்கை வாங்கிய மும்பை ரசிகர்கள்
  • சென்னை ரசிகரான சிறுவனின் ஆட்டம் இணையத்தில் வைரல்
’மைதானத்தில் நடந்த களேபரம்’ சிறுவனிடம் மொக்கை வாங்கிய மும்பை ரசிகர்கள் title=

ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய போட்டியாக கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெரும் பரபரப்புக்கு இடையே நடந்து முடிந்துள்ளது. தல தோனி, நீண்ட நாட்களுக்குப் பிறகு கடைசி ஓவர் கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றித் தேடித் தந்து, உலகின் தலைச்சிறந்த பினிஷர் நான் தான் என்பதை நிரூபித்தார். 

மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் சர்ச்சையை ஏற்படுத்தும் அம்பயர் நிதின் மேனன் யார்?

இந்த ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, இப்போட்டியில் இருந்து வெற்றிக் கணக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மும்பை ரசிகர்களும் இளவு காத்த கிளியாக ரோகித் படையை வெகுவாக நம்பியிருந்தனர். அவர்களின் நம்பிக்கையும் 19வது ஓவர் வரை நீடித்தது. ஆனால், ஒரே ஒரு ஓவரில் அவர்களின் நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்தெறிந்தார் தோனி. Newton’s 3rd law adding to Karma’s boomerang

முதல் வெற்றியை பெற்றுவிடுவோம் என காத்திருந்த மும்பை ரசிகர்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. மைதானத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கூட, இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதாவது தோனி களத்தில் இருப்பதை மறந்துவிட்டு முன்கூட்டியே வெற்றியை கொண்டாடியுள்ளனர். அதோடு நிறுத்திக் கொள்ளாமல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறுவனிடம் சென்று, வெற்றி பெற்றதுபோல் சேட்டை செய்து களேபரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் படிக்க | பழைய ஃபார்முக்கு போன ஆர்சிபி - சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

ஆனால், அப்போது பொறுமையாக இருந்த அந்த சிறுவன், சென்னை வெற்றி பெற்றதும், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் செய்த சேட்டையை, அவர்கள் இடத்துக்கே சென்று செய்து காட்டி மொக்கை செய்துள்ளார்.  இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் முன்பு அவர் ஆடும் ஆட்டம் காண்போரை வெகுவாக சிரிக்க வைத்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News