யூரோ 2020 கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி காலிறுதி சுற்றுக்குக் கூட இடம் பெறாதது கால்பந்து ரசிகர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. காலிறுதிக்கு தனது அணி இடம்பெறாததால், ரொனால்டொ உணர்ச்சிவசப்பட்டார். அது உலகெங்கிலும் உள்ள ரொனால்டோ ரசிகர்கள் அனைவருக்கும் இதயத்தை உடைக்கும் தருணமாக அமைந்தது.
யூரோ 2020 போட்டியில் ரொனால்டோ மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், நாக் அவுட் சுற்றில் ஒரு கோல் கூட அடிக்க முடியாததால் போட்டியில் இருந்து வெளியேறியது போர்ச்சுகல் அணி. அந்த வருத்தத்தில் டிரஸ்ஸிங் அறைக்குச் செல்லும் ரொனால்டோ வெறுப்புடன் தனது கவசத்தை தூக்கி வீசி விட்டுச் செல்வதை காண முடிந்தது.
யூரோ 2020 போட்டியில் ரொனால்டோ மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், காலிறுதிக்கு அவரது தலைமையிலான போர்ச்சுகல் அணி இடம்பெறாததால் அவர் மன வருத்தம் அடைந்துள்ளார். அதை வெளிப்படுத்தும் வீடியோ அனைவருக்கும் வருத்தத்தை அளிக்கிறது,
Also Read | Tokyo Olympics: இந்திய தேசியக் கொடியை ஏந்திச்செல்லும் பெருமையை பெறுவாரா பி.வி. சிந்து?
இன்று அதிகாலை நடைபெற்ற நாக்-அவுட் சுற்று யூரோ கோப்பை ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணி, பெல்ஜியம் அணியை எதிரொண்டது. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி ஒரு கோல் அடித்தது.
ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால் ஒரு கோலைக்கூட எடுக்க முடியவில்லை. அதன்பிறகு இரு அணிகளுமே கோல் அடிக்காததால், பெல்ஜியம் அணி 1-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இது ரொனால்டோவுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது வெளிப்படையாகவே தெரிந்தது.
Nahhh mannn, Possibly the last every time we see Ronaldo at the EUROS pic.twitter.com/1aPQVOLr0F
— Dhruvzzz (@dhruvzz8) June 27, 2021
யூரோ கோப்பை 2020 கால்பந்துப் போட்டிகளில் செக் குடியரசு (Czech Republic) மற்றும் பெல்ஜியம் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. ஹங்கேரியில் புடாபெஸ்ட் நகரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் செக் குடியரசு அணி, நெதர்லாந்து (Netherlands) அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்றாலும், போட்டியின் இரண்டாவது பாதியில் செக் குடியரசின் தாமஸ் ஹோல்ஸ் ஒரு கோல் அடித்தார். பிறகு பாட்ரிக்ஸ் ஷிக் கோல் அடித்தார்.
இறுதியில், செக் குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
Also Read | உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியா மகளிர் அணி தங்கம் வென்றது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR