IPL 2021, CSK vs RCB: தோனியின் சென்னை Vs கோலியின் பெங்களூரு! யாருக்கு வெற்றி?

CSK vs RCB Dream11 Team Prediction IPL 2021: ஆர்சிபி அணிக்கு எதிராக டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 25, 2021, 04:14 PM IST
IPL 2021, CSK vs RCB: தோனியின் சென்னை Vs கோலியின் பெங்களூரு! யாருக்கு வெற்றி? title=

CSK vs RCB Dream11 Team Prediction IPL 2021: ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் இன்று சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகிறது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை (Chennai Super Kings) அணியின் கேப்டன் தோனி (Dhoni) முதலில் பேட்டிங் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி பெங்களூர் அணி (Royal Challengers Bangalore) பவுலிங் செய்கிறது. 

ALSO READ | IPL 2021: கடைசி பந்து வரை டென்ஷன், MI வீழ்த்தி RCB முதல் வெற்றி!

தற்போது வரை 2 ஓவர்களில் 21 ரன்கள் விளாசிய தொடக்க வீரர்கள் டுப்ளசிஸ் - கெயிக்வாட் ஜோடி.  4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்துள்ளது. 

பெங்களூர் மற்றும் சென்னை அணிகள் இதுவரை ஐபிஎல் அரங்கில் 26 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் சென்னை அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூர் அணி 9 ஆட்டங்களில் வென்றுள்ளது. நடப்பு சீசனில் பெங்களூர் அணி இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மறுபக்கம் சென்னை அணி முதல் போட்டியை தவிர மற்ற மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News