ஐபிஎல் 2021 சீசன் போன வாரம் முடிவடைந்தது மற்றும் புதிய சீசனைப் பற்றி தற்போது பேச்சு எழுந்துள்ளது. ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கிய டி 20 உலகக் கோப்பைக்கு (ICC T20 World Cup) இடையில் கூட, ஐபிஎல் (Indian Premier League) பற்றிய விவாதம் முடிவடையவில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஏற்கனவே லீக்கின் 15 வது சீசனுக்கு, அதாவது ஐபிஎல் 2022 (IPL 2021) க்கு தயாராகிவிட்டது. அதன் முதல் கட்ட பணியாக இரண்டு புதிய அணிகள் குறித்தும் மற்றும் இரண்டு புதிய உரிமையாளர்களை குறித்தும் பிபிசிஐ அடுத்த வாரம் அறிவிக்கும்.
ஐபிஎல் 2022 சீசனில் 8 அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் பங்குபெறும். இப்போது இரண்டு அணிகளின் உரிமையை யார் பெறுவார்கள் என்ற ஊகங்கள் வெளியாகி வருகின்றன. இரண்டு புதிய அணிகளை வங்க பல பெரிய நிறுவனங்கள் போட்டியில் கலந்துக்கொண்டு உள்ளன. ஆனால் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த போட்டி வரிசையில், மிகவும் பிரபலமான பாலிவுட் ஜோடியும் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வரை கிடைத்த தகவலின் படி, உலகின் முன்னணி கால்பந்து கிளப்பான மேன்செஸ்டர் யுனைட்டெட் கிளப் நடத்தி வரும் தி க்ளேசர் ஃபேமிலி குழுமம் புதிய அணியை ஏலம் எடுப்பதற்காக விண்ணப்பம் பெற்றுள்ளது. அந்த குழுமத்தினருடன் இணைந்து ரன்வீர் சிங் (Ranveer Singh) மற்றும் தீபிகா படுகோனே (Deepika Padukone) ஜோடி ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ALSO READ | IPL 2022 Edition: இனி ஐ.பி.எல் போட்டியில் 10 அணிகள் விளையாடும் BCCI ஒப்புதல்
ஐபிஎல் மற்றும் பாலிவுட் இடையே எப்போதும் நல்ல தொடர்பு உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மற்றும் ஜூஹி சாவ்லா ஆகியோருக்கு சொந்தமாக உள்ளது. அதே நேரத்தில் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பஞ்சாப் கிங்ஸில் பங்கு உள்ளது.
தீபிகாவின் குடும்பத்தும் விளையாட்டுக்கும் ஏற்கனவே சம்பந்தம் இருக்கிறது. அவரது தந்தை பிரகாஷ் படுகோன் முன்னாள் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன் ஆவார். ரன்வீர் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் கலந்துக்கொண்டு உள்ளர் மற்றும் தற்போது உலகின் மிகவும் பிரபலமான கூடைப்பந்து லீக், NBA இன் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார்.
அக்டோபர் 25 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டி 20 உலகக் கோப்பை போட்டி நடந்து முடிந்த ஒரு நாளுக்குப் பிறகு புதிய அணிகள் குறித்து முடிவுகள் அறிவிக்கப்படும். அதாவது அக்டோபர் 26 ஆம் தேதியன்று துபாயில் நடைபெறும் ஏலத்தின் போது எந்த நிறுவனம் புதிய அணிகளை வாங்குகிறது என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும்.
ஐபிஎல் ஏலத்தில் கலந்துக்கொள்ள விரும்புவோர் அக்டோபர் 20 தேதிக்குள் ஐடிடி ( Invitation to tender) எனப்படும் நுழைவுச்சீட்டு விண்ணப்பத்தை வாங்கியிருக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை அனைவரும் வாங்க முடியாது, அதற்கான சில விதிமுறைகள் உண்டு. அதாவது ஆண்டுக்கு ரூ.3000 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே ஐபிஎல் ஏலத்தில் கலந்துக்கொள்ள முடியும். மேலும் ஏலத்தில் கலந்துக்கொள்ள நுழைவுச்சீட்டை வாங்குவதற்கு ரூ.10,00,000 முன்பணம் செலுத்த வேண்டும் என்பது குரிப்பிடத்தக்கது.
ALSO READ | 5 ஆண்டுகளுக்குப் பிறகு, டி20 போட்டியில் பந்து வீசிய விராட் கோலி: Viral Video
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR