சுவாராசியமான TOP 5 IPL CONTROVERSIES உங்களுக்குத் தெரியுமா?

ஐ.பி.எல் சர்ச்சைகளின் பட்டியல் மிகவும் நீளமானது. அதை பட்டியலிட்டு TOP 5  என்று பார்க்கலாம். பட்டியலில் ஐந்தாவது இடம் பெறுவது யார் என்று தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறதா? 

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 10, 2020, 05:40 PM IST
  • IPL போட்டிகளில் சர்ச்சைகளின் பட்டியலில் முதல் இடம் யாருக்கு?
  • சர்ச்சைப் பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள் மட்டும்தான் இடம் பெற வேண்டுமா என்ன?
  • நடிகையும் இடம் பெறலாம், வீரரின் மனைவியும் கொதித்தெழுந்த சர்ச்சையும் இருக்கலாம்...
சுவாராசியமான TOP 5 IPL CONTROVERSIES உங்களுக்குத் தெரியுமா?

ஐ.பி.எல் சர்ச்சைகளின் பட்டியல் மிகவும் நீளமானது. அதை பட்டியலிட்டு TOP 5  என்று பார்க்கலாம். பட்டியலில் ஐந்தாவது இடம் பெறுவது யார் என்று தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறதா? இது விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சையல்ல. IPL தொடர்பான சர்ச்சைகள். இறங்குமுக வரிசையில் பட்டியலைப் பார்ப்போம்...

5) ஐ.பி.எல் ஸ்பான்சர் VIVOவுக்கு கல்தா
ஐ.பி.எல் சர்ச்சைகளின் பட்டியல் மிகவும் நீளமானது. அதை பட்டியலிட்டு TOP 5  என்று பார்க்கலாம். பட்டியலில் ஐந்தாவது இடம் பெறுவது யார் என்று தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறதா? இது விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சையல்ல. பிரச்சனை அணிக்கும், வீரர்களுக்கும் இடையிலும் அல்ல. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் எல்லைப் பதற்றங்கள் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் பூசல் ஊச்சநிலையை அடைந்தது. அப்போது, சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதனால் பி.சி.சி.ஐ (BCCI) சீனாவின் VIVO நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த IPL TITLE SPONSORSHIPஐ ரத்து செய்தது. இதனால் ஏற்பட்ட இழப்பு 100 முதல் 150 கோடி ரூபாய்கள் என்பது கேட்பதற்கே மலைப்பாக இருக்கிறதா? இந்த மலைப்பு தான் ஐ.பி.எல் சர்ச்சைப் பட்டியலில் ஐந்தாம் இடத்தைக் கொடுத்துள்ளது.  

4) சுரேஷ் ரெய்னா...

ஐ.பி.எல் சர்ச்சைப் பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடிப்பவர் சுரேஷ் எர்ய்னா. திடீரென அவர் போட்டி நடைபெறும் துபாயில் இருந்து இந்தியாவுக்கு திரும்பினார். தனது சொந்தக் காரணங்களுக்காகவே நாடு திரும்பினேன் என்று அவர் சொன்னாலும், ஊகங்கள் பல்வேறாக இருக்கின்றன. ஊகங்களில் ஒன்று, சுரேஷ் ரெய்னாவுக்கு, தல தோனிக்கு கொடுக்கப்பட்டது போல் அனைத்து வசதிகளும் கொண்ட அறை இல்லையாம்! பிறகு bubble rules பிடிக்கவில்லை என்றும் ஒரு வதந்தி உலா வந்தது. இவை உதாரணத்திற்கு தான். இதுபோல் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், சுரேஷ் ரெய்னாவின் விலகல் பெரிய அளவிலான சர்ச்சைகளையும், யூகங்களையும் எழுப்பியது. எது எப்படி இருந்தாலும் சரி, சுரேஷ் ரெய்னா இல்லாத சென்னை அணி, இந்த முறை ப்ளே ஆஃப் சுர்றுக்குக் கூட தகுதி பெறவில்லை. ஹர்பஜன் இவ்வாறு போட்டியில் இருந்து விலகியபோது இந்த அளவு சர்ச்சைகள் எழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

3) தோனி த UMPIRE

ஐ.பி.எல் சர்ச்சைப் பட்டியலின் கவுண்டவுனில் சென்னை அணியின் கேப்டன், மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் தோனியின் பெயர் மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது. தோனி சர்ச்சையில் இடம் பிடித்துள்ளார் என்பது நம்புவதற்கு கொஞ்சம் சிரமம் தான்.   அக்டோபர் 13ஆம் தேதியன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில்   ஷர்துல் தாகூர் wide பந்து வீசினார். அப்போது அம்பயர் wideக்கான சைகையைக் காட்ட கையை உயர்த்திய போது, தோனி கத்தினார். அதைப் பார்த்த அம்பயர் wide சிக்னல் கொடுக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் உலகில் சர்ச்சைகள் இன்னமும் தொடர்கின்றன.

2) அனுஷ்கா -கவாஸ்கர்

சர்ச்சைப் பட்டியலில் Master vs Star நடிகை அனுஷ்கா ஷர்மா இடம் பெறுகிறார். அனுஷ்கா ஷர்மா விளையாட்டு வீராங்கனை இல்லை.ஆனால் விராட் கோலி என்ற அற்புதமான வீரரின் காதலி, மனைவி...  ஐ.பி.எல்லின் தொடக்கத்தில் விராட் கோலியின் திறமை வெளிப்படவில்லை. அப்போது வேடிக்கையாக பேசும்போது கவாஸ்கர் சொன்ன ஒரு கமெண்ட் வைரலாகி ஐ.பி.எல் சர்ச்சைப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துவிட்டது. கேப்டன் கோலி, அனுஷ்கா போடும் பந்துகளுக்கு மட்டும்தான் பயிற்சி எடுத்தார் என்று கவாஸ்கர் காமெடி செய்துவிட்டார். அந்த காமெடிக்கும் காரணம் இருக்கிறது. அனுஷ்காவும், விராட் கோலியும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வீடியோ வைரலானது. ஆனால் விளையாட்டும் காமெடியும் எப்போது ஜாலியாக இருக்கும், எப்போது சீரியசாகும் என்பது யாருக்குத் தெரியும்? கவாஸ்கரின் கமெண்டுக்க்கு அனுஷ்கா ஷர்மா சூடான டிவிட்டர் பதிலைக் கொடுத்தார். அதற்கு கவாஸ்கரும் பதில் கொடுக்க இறுதியில் பஞ்சாயத்து பைசல் ஆகிவிட்டது. ஆனால் விராட் கோலியோ வாயைத் திறக்காமல் கமுக்கமாக இருந்துவிட்டார். எனவே இந்த சர்ச்சை விராட்-அனுஷ்கா-கவாஸ்கர் என்ற பெயர் பெறாமல், Master vs Star சர்ச்சை என பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

1). விராட் சூரியகுமார் யாதவ்

அனுஷ்கா ஷர்மா மற்றும் கவாஸ்கர் விவகாரத்தில் மட்டும் விராட் கோலி, மெளனம் காக்கவில்லை. சூர்யகுமார் யாதவின் விவகாரத்திலும் மெளன குருவாகவே இருந்தார் விராட். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு தான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற மனத்தாங்கலில் இருந்த சூர்யகுமாருக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டி, அவரை நிரூபிக்கும் அற்புதமான வாய்ப்பாக அமைந்தது. ஆர்.சி.பிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய பலத்தால் மும்பை அணியை ஜெயிக்க வைத்த சூர்யகுமார், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தேர்ந்தெடுக்கப்படாதது பற்றி எதுவுமே சொல்லாமல், ஒரு சூப்பர் போஸ் கொடுத்தார். " keep calm"  அமைதியாக இரு என்று சொல்லும் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவின் பிரசித்தி பெற்ற சமிக்ஞையை செய்த சூர்யகுமார் சமூக ஊடகங்களில் வைரலானார். அதன்பிறகு, சூர்யகுமார் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற கேள்விகளும் எழுந்தன. எனவே ஐ.பி.எல் போட்டிகளின் சர்ச்சைகளின் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் " keep calm" நாயகன் சூர்யகுமார் யாதவ்.
இன்றைய போட்டியில் மும்பை அணி கோப்பையை வெல்லுமா? ஐ.பி.எல் 2020 இறுதிப்போட்டியின் சுவராஸ்யமான சர்ச்சைகள் ஏதாவது வரப்போகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்...

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News