Sri Lankan Cricket: புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட இலங்கை கிரிக்கெட்டர்கள் மறுப்பது ஏன்?

சம்பள தகராறு தீர்க்கப்படும் வரை இலங்கை கிரிக்கெட் வீரர்கள், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் வருடாந்திர மற்றும் சுற்றுப்பயண ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 6, 2021, 03:46 PM IST
  • புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட இலங்கை கிரிக்கெட்டர்கள் மறுப்பது ஏன்?
  • ஒப்பந்தங்களில் கையெழுத்திட ஜூன் 3 இறுதிநாள்
  • சம்பளம் கொடுக்கப்படாவிட்டாலும், வீரர்கள் நாட்டிற்காக விளையாடுவார்கள்
Sri Lankan Cricket: புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட இலங்கை கிரிக்கெட்டர்கள் மறுப்பது ஏன்? title=

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தங்களில் சீனியர் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் கையொப்பமிட மறுத்துவிட்டனர் என்ற செய்தி ஆச்சரியம் அளிக்கிறது. 

ஒப்பந்தத்தில் கையெழுத்திட சனிக்கிழமை (ஜூன் 3) இறுதிநாள் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிரிக்கெட் வாரியம் வழங்கிய காலக்கெடுவுக்குள் புதிய ஒப்பந்தங்களில் வீரர்கள் கையெழுத்திடவில்லை. 

ஆனால், அவர்கள் எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாட ஒப்புக்கொண்டனர். செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட புதிய ஒப்பந்தங்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் ஒப்புக் கொள்ளவில்லை அவர்கள் சார்பில் பேசிய வழக்கறிஞர் நிஷன் ப்ரேமதிரத்னே (Nishan Premathiratne) தெரிவித்தார்.

Also Read | Pakistan கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுக்கும் விதம் புரியவில்லை என சாடுகிறார் Ramiz Raja

"சம்பள தகராறு தீர்க்கப்படும் வரை வீரர்கள் வருடாந்திர மற்றும் சுற்றுப்பயண ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டனர்" என்று வழக்கறிஞர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"வீரர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படாவிட்டாலும், அவர்கள் நாட்டிற்காக விளையாடுவார்கள், ஏனெனில் அது அவர்களின் முக்கிய குறிக்கோள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று T20I போட்டிகளில் விளையாட இலங்கை அணி, இங்கிலாந்து செல்ல உள்ளது.

Also Read | அனுஷ்கா-விராட் கோலி தம்பதிகளின் மகள் Vamikaவின் முதல் புகைப்படம்

முன்னதாக, டெஸ்ட் கேப்டன் திமுத் கருணாரத்ன (Dimuth Karunaratne), தினேஷ் சந்திமல் (Dinesh Chandimal) மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் (Angelo Mathews) உள்ளிட்ட இலங்கையின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள், நாட்டின் கிரிக்கெட் வாரியம் வழங்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டனர்.

இலங்கை கிரிக்கெட் வாரியம், 24 முன்னணி வீரர்களின் ஒப்பந்தங்களை நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கியது. ஒப்பந்தங்களில் கையெழுத்திட ஜூன் 3 வரை அவர்களுக்கு காலக்கெடு வழங்கப்பட்டது. அதில், ஆறு வீரர்கள் மிக உயர்ந்த வகை அதாவது A பிரிவில் வருகிறார்கள். அவர்களின் வருடாநந்திர சம்பளம் $70,000 முதல் $100,000 வரை இருக்கும். இந்த வகையில், தனஞ்சய டி சில்வா அதிக சம்பளம் ($100,000) பெறுவார், மற்ற வீரர்கள் தலா 70,000-80,000 டாலர் ஊதியம் பெறுவார்கள்.

வீரர்களின் சம்பள விவரங்களை பொதுத்தளத்தில் வெளியிடும் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு தங்களுக்கு “அதிர்ச்சியும் திகைப்பும் தருவதாக” இலங்கை வீரர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   "இந்த வெளிப்பாடுகள் ஒவ்வொரு வீரருக்கும் அழுத்தத்தை அளிக்கிறது" என்று அவர்கள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read | Success Mantra: சச்சின் டெண்டுல்கரின் வெற்றி ரகசியத்தை சொல்லும் சத்குரு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News