ஆட்ட நாயகனாக அடில் ரஷீத்; தொடரின் நாயகனாக ஜோ ரூட் தேர்வு!!

நேற்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான கடைசி போட்டியின் ஆட்ட நாயகனாக அடில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 18, 2018, 12:48 AM IST
ஆட்ட நாயகனாக அடில் ரஷீத்; தொடரின் நாயகனாக ஜோ ரூட் தேர்வு!! title=

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இத்தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் இன்று ஹெட்டிங்கெலி மைதானத்தில் நடைப்பெற்று.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில், முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் தொடங்கிய இந்திய அணி ஐம்பது ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விரத் கோலி 71 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் அடில் ரஷீத் மற்றும் டேவிட் வில்லி தலா மூன்று விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கவுள்ளது. ஆரம்ப முதலே அதிரடி காட்டிய இங்கிலாந்து அணி. ஜோ ரூட்(100*) மற்றும் கேப்டன் இயோன் மோர்கன்(88*) இணைந்து நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. இந்திய சார்பில் ஷர்டுல் தாகூர் மற்றும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. 

இந்த போட்டியில் ஆட்டநாயகனாக மூன்று விக்கெட்டுகளை எடுத்த அடில் ரஷீத் தேர்வு செயப்பட்டார். அதேபோல ஒரு நாள் தொடரின் நாயகனாக இரண்டு சதங்களை அடித்த ஜோ ரூட் தேர்ந்தேடுக்கப்பட்டார். 

Trending News