Kamal Haasan To Join Tamil Bigg Boss 8 : தமிழ் மக்கள் மத்தயில் அதிக கவனம் பெற்ற நிகழ்ச்சியாக வலம் வருகிறது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன், சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது. இதனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸில் இருந்து விலகிய கமல்:
தமிழில், 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் முதல் சீசன் முதலே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதன் முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முதல் காரணமாக இருந்தவர், நடிகர் கமல்ஹாசன். இவர்தான், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில், இவர் செய்த சில விஷயங்கள் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தின. இதையடுத்து, ரசிகர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளானார். இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் அறிவிப்பு வந்த போது, கமல்ஹாசன்தான் இதற்கு ஹோஸ்டாக இருப்பார் என பேசப்பட்டது. இதற்கான ப்ரமோ ஷூட்டிங்கும் நடந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், கைவசம் நிறைய படம் இருப்பதால், தன்னால் இந்த நிகழ்ச்சிக்குள் இனி செல்ல முடியாது என்று கூறி, இதிலிருந்து கமல் விலகிவிட்டார். இதையடுத்து, புதிய நிகழ்ச்சி தொகுப்பாளராக உருவெடுத்தார் விஜய் சேதுபதி.
சொதப்பினாரா?
நடிகர் விஜய் சேதுபதி, எப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கையாள போகிறார் என்பது குறித்த பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், முதல் எபிசோடிலேயே தனது பேச்சால் பலரையும் கவர்ந்து விட்டார், விஜய் சேதுபதி. அடுத்தடுத்த வார இறுதி எபிசோடிகளில், இவர் போட்டியாளர்களை கையாண்ட விதம் சரியில்லை என்று சிலர் கூறியதை அடுத்து, பலர் விஜய் சேதுபதி, தனக்கு கொடுத்த வேலையை சொதப்பலாக செய்து வருவதாக கருத்து தெரிவித்து வந்தனர்.

மீண்டும் கமல் என்ட்ரி?
நடிகர் கமல்ஹாசன், தற்போது தக் லைஃப் பட வேலைகளிலும், இன்னும் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தின் வேலைகளிலும் பிசியாக இருந்தார். இதற்கு இடையே, AI குறித்து படிப்பதற்காக, அமெரிக்கா சென்றிருக்கிறார். இவர், இந்த படிப்பை முடித்து விட்டு வந்தவுடன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக, மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத்தலைவர் கோவை தங்கவேலு கூறி இருக்கிறார். இந்த விஷயம் குறித்து, கமல்ஹாசன் ஏதேனும் கூறினால்தான், உண்மை என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.
மேலும் படிக்க | Bigg Boss Tamil 8: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
ரசிகர்கள் அதிருப்தி..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில், கமல்ஹாசனை “ஒரு சாராருக்காக பேசுகிறார்” என்ற கருத்துகள் எழுந்தன. தற்போது, அதே போன்ற கருத்துகள், விஜய் சேதுபதி மீதும் எழுந்து வருகிறது. மகாராஜா படத்தில், விஜய் சேதுபதியுடன் நடித்த சாச்சனா பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருக்கிறார். இவரை, வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தனது தங்கை போல பார்த்துக்கொள்வதாக கூறும் ரசிகர்கள், அதனை சாச்சனா அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு சில விஷயங்களை செய்வதாக கருத்துகளை தெரிவிக்கின்றனர். வார இறுதி எபிசோடுகளில், இவருக்கு விஜய் சேதுபதி ஆதரவாக பேசுவதாகவும் சிலர் கூறுகின்றனர். இவ்வளவு செய்தும், சாச்சனா இன்னும் எவிக்ட் ஆகாமல் இருப்பது, சந்தேகத்தை வரவழைப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். இதனால், ரசிகர்கள் விஜய் சேதுபதி மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
மேற்கூறியவை மட்டுமன்றி, போட்டியாளர்களை மரியாதையின்றி நடத்துவது, அவர்களை பேசவிடாமல் செய்வது என பல்வேறு விஷயங்களை விஜய் சேதுபதி செய்வதாகவும் சிலர் கூறுகின்றனர். முன்னர், “விஜய் சேதுபதிதன் பெஸ்ட் ஹோஸ்ட்” என்று சொன்ன வாய்கள், இப்பாேது, “மொதல்ல இவர ஷோ-வ விட்டு தூக்குங்க..” என்று கூறி வருகின்றனராம்.
மேலும் படிக்க | ரூ.130 கோடி வாங்கிய கமல்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









