England vs India: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. மழையின் காரணமாக ஐந்தாம் நாள் ஆட்டம் தடைபட்டதால், அந்தப்போட்டி டிராவில் முடிந்தது.
இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி ( 2nd Test Lord's, London) நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் முதல் போட்டியில் விளையாடிய ஷர்துல் தாகூருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இஷாந்த் சர்மா அணியில் இடம்பெற்றார். முதலில் பேட்டிங் செய்த இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளனர்.
அவரின் சாதனைகள் பின்வருமாறு:
* கடந்த 35 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் வெளிநாட்டு மண்ணில் 75 ரன்களுக்கும் மேல் கடந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவே நான்காவது முறை.
* கே.எல் ராகுல் டெஸ்ட் போட்டியில் கடைசியாக 2018ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் சதம் அடித்துள்ளார். அதன்பின் கடந்த மூன்று வருடங்களில் அடுத்த சதத்தையும் இங்கிலாந்து மண்ணிலேயே பதிவு செய்துள்ளார்.
* ஓவல் மற்றும் லாட்ஸ் மைதானங்களில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் கே.எல் ராகுல். இதற்கு முன் ராகுல் டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரி இந்த சாதனையை படைத்துள்ளனர்.
* ரோகித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் கூட்டணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளிலும் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 100 ரன்களை கடந்த இரண்டாவது ஜோடி என்ற சாதனை படைத்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் சிறந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ஆக நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா கே.எல் ராகுல் கூட்டணி இருந்தது.
* இந்தியாவிற்கு வெளியில் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக டெஸ்ட் போட்டிகளில் 28 இன்னிங்சில் 4 சதம் அடித்துள்ளார் கே.எல் ராகுல். இதே சாதனையை விரேந்திர சேவாக் 59 இன்னிங்சில் அடித்துள்ளார்.
* இன்றைய தினத்தில் 2007ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை இங்கிலாந்தில் பதிவு செய்தது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. கே.எல் ராகுல் 127 ரன்களுடனும், ரகானே 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR