FIFA 2018: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் G பிரிவு ஆட்டத்தில் பனாமா அணியை இங்கிலாந்து அணி வெற்றிக் கொண்டது!

Last Updated : Jun 25, 2018, 08:50 AM IST
FIFA 2018: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து! title=

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் G பிரிவு ஆட்டத்தில் பனாமா அணியை இங்கிலாந்து அணி வெற்றிக் கொண்டது!

FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஸ்யாவில் நடைப்பெற்று வருகிறது. 32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியானது 64 ஆட்டங்களாக நடைப்பெற்று வருகின்றது.

ரஷ்யாவின் நைனி நவ்கோரோட் நகரில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்த் அணி பனாமா அணி எதிர்கொண்டு விளையாடியது.

ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜான் ஸ்டோன்ஸ் முதல் கோலினை அடித்தார். பின்னர், 22-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி மீண்டும் கோல் அடித்து அசத்தியது. தொடர்ந்து 36, 40, 45 ஆகிய நிமிடங்களில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து கோல்களை அடித்து பனாமா அணியின் வெற்றி கனவை சிதைத்தது.

ஆட்டதின் முதற்பாதியில் 5-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, 62-வது நிமிடத்தில் அணியின் 6-வது கோலையும் அடித்தது.

வெற்றிக் கனவோடு களமிறங்கிய பனாமா அணியால் ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் கிடைத்த பிரி கிக் வாய்ப்பை பயன்படுத்தி மட்டுமே ஆறுதல் கோலினை பதிவு செய்ய முடிந்தது. 

இந்நிலையில் ஆட்டத்தின் முடிவில் 6-1 கோல் கணக்கில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் சிறப்பம்சமாக இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி நாக்-அவுட் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தி உள்ளது.

Trending News