இந்திய கிரிக்கெட் அணிக்கு வலுவான பந்துவீச்சு சக்தி இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் ஏதர்டன் தெரிவித்துள்ளார். மேலும் வரவிருக்கும் ஆஸ்திரேலியா - இந்திய கிரிக்கெட் தொடரை அவர் மிகவும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
READ | COVID-19 மத்தியில் மகளிர் IPL போட்டிகளுக்கு கோரிக்கைகள் அதிகரித்து வருகிறது!...
இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பற்றாக்குறை இருந்த ஒரு காலம் இருந்தது, ஆனால் இன்று இந்தியாவில் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா போன்ற மிகப்பெரும் ஆளுமைகள் உள்ளன. கிரிக்கெட்டின் பல பெரிய அணிகள் இன்று இந்தியாவில் உலகின் சிறந்த பந்துவீச்சு தாக்குதலைக் எதிர்கொண்டுள்ளதாக பலர் நம்புகிறார்கள். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் ஏதர்டனும்(Michael Atherton) இதே கருத்தினை தான் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் வரவிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா தொடருக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய தொடரின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இடையிலான போட்டி இந்த தொடரில் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று ஏதர்டன் நம்புகிறார். ஸ்மித்தை கட்டுப்படுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் எந்த மூலோபாயத்தை மேற்கொண்டாலும் அது வேடிக்கையாக இருக்கும் என்று ஏதர்டன் கருதுகிறார்.
READ | T20 கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் IPL இரண்டிலும் விளையாட விரும்புகிறேன்: ரோஹித் சர்மா...
இது குறித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஏதர்டன், 'இந்தியா அவருக்கு (ஸ்மித்) என்ன மூலோபாயம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பதைப் பார்க்க எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது. ஸ்மித் பேட்டிங் செய்வதற்கு பல வழிகளை கையாள்கிறார். அவர் வழக்கத்திற்கு மாறானவர், ஆனால் அவரது பேட்டிங்கை நான் ரசிக்கிறேன். முற்றிலும் மாறுபட்ட வழியைக் கொண்ட சிலர் விளையாடும்போது விளையாட்டு சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் என ஏதர்டன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிரியர்கள் ஆஸ்திரேலியாவில் வெற்றியை எதிர்பார்க்கிறார்களா இல்லையா என்ற கேள்வியை ஏதெர்டனிடம் கேட்டபோது, "இந்தியர்கள் இந்த முடிவை எதிர்பாரக்கலாம், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதை எதிர்பார்க்க காரணம் அவர்களது வலுவான பந்துவீச்சு தாக்குதல்" என்று அவர் பதிலளித்தார். நல்ல வேகப்பந்து வீச்சு இல்லாமல் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, ஆஸ்திரேலியாவில் ரோஹித் ஷர்மாவின் பங்கு குறித்து ஏதர்டன் பேசுகையில்., 'இந்திய பேட்ஸ்மேன்கள் எனக்கு மிகவும் இயல்பானவர்களாக இருப்பதால் அவர்கள் அனைவரையும் நான் பார்த்து ரசிக்கிறேன். அவர்கள் எந்த தொழில்நுட்பத்தையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இதற்கு ரோஹித் சர்மாவை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. ஆஸ்திரேலியாவில் டாப் ஆர்டர் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், நீங்கள் அங்கு ஒரு திடமான தொடக்கத்தை மேற்கொண்டால் தான் வெற்றியை தனதாக்க முடியும். எனவே இங்கு ரோஹித் ஷர்மாவின் பங்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.
READ | Kings XI பஞ்சாப் அணியை வழிநடத்த ஆர்வமாக இருந்தேன்... மனம் திறக்கும் KL ராகுல்!
ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 3-ஆம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிஸ்பேனுக்குப் பிறகு, இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெறும், பின்னர் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெறும். குறிப்பிடத்தக்க வகையில், 2018-19 ஆம் ஆண்டில், இந்தியா தனது சொந்த நிலத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பதில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.