பாக்கிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமர் ஹனிப்-ன் மகன் U-19 அணியில் வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்துக்கொண்டார்!
அமர் ஹனிப், 1990 களில் பாக்கிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது மகன் மொகமட் ஜர்யாப், இஸ்லாமாபாத் U-19 அணியின் தேர்வுக்குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
அவரது வயது முதிற்சி காரணமாக அவரை தேர்ந்தெடுக்கவில்லை என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மனசோர்வுக்கு ஆளான ஜர்யாப் தூக்கிட்டு தற்கொலை சொய்துகொண்டுள்ளார்.
ஜர்யாப், இளங்கலை முதலாம் ஆண்டு பயின்றுவரும் மாணவர் ஆவார். இவரின் மரணத்திற்கு முந்தைய நாள் தனது தந்தையிடன் தனது வருத்தங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது தந்தை தெரிவிக்கையில், ஜர்யாப்-ன் பயிற்சியாளர் கொடுத்த இக்கட்டான சூழ்நிலைகலே ஜர்யாப்-யை தற்கொலைக்கு தூண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த மாதம் ஜர்யாப், லாகூரில் நடைப்பெற்ற U-19 போட்டிகளில் கலந்துக்கொள்வதற்காக சென்றுள்ளார். ஆனால் போட்டியின் போது ஏற்பட்ட சிறு காயத்தால் அவர் மீண்டும் வீட்டிற்கு அனுப்பப் பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில் "ஒரு வீரரை வீட்டிற்கு அனுப்பும் அளவிற்கான பெரிய காயங்கள் ஏதும் அப்போது ஏற்படவில்லை, எனினும் அணியின் பயிற்சியாளரின் கட்டாயத்தின் பேரில் ஜர்யாப் வீட்டிற்கு அனுப்ப பட்டார" எனவும் அவர் தெரிவித்துள்ளார்