டாடா ஐபிஎல் 15வது சீசன் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் போட்டியில் மோசடி நடைபெற்று இருப்பதாக சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்துள்ளது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிரம்மாண்ட ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட பலர் நேரில் கண்டு ரசித்தனர்.
இந்த போட்டியில், ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. நடப்பு தொடரில் அறிமுக அணியாக களமாடிய இந்த அணியை கேப்டன் ஹர்திக் பாண்டியா திறம்பட வழிநடத்தியுள்ளார். மேலும், அவர் இந்த ஆட்டத்தில் கேப்டன்சியில் மட்டுமல்லாது, பந்துவீச்சு, பேட்டிங் என தனது ஆல்ரவுண்டர் முத்திரையை பதித்து தனது கிரிக்கெட் வாழ்கையில் புதிய அத்யாயத்தை எழுதியுள்ளார்.
மேலும் படிக்க | பீகாரில் எம்எஸ்.தோனி மீது வழக்குப்பதிவு
இருப்பினும் இந்த ஐபிஎல் மேச்சில் மோசடி நடைபெற்று இருப்பதாகவும், குஜராத் அணிக்குதான் ஐபிஎல் வெற்றி என்பது ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டது போன்றும் உள்ள பேச்சுக்கள் பரவலாக பேசப்பட்டு வந்தன. இந்நிலையில் இதை மேலும் உறுதி செய்யும் விதமாக, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், டாடா ஐபிஎல் கிரிக்கெட் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிசிசிஐ-யின் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பணியாற்றி வரும் நிலையில், அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துமா என்பது சந்தேகம்தான் எனக்கூறியுள்ள சுப்ரமணியன் சாமி, இதனால் இந்த விஷயத்தில் பொதுநல வழக்கு என்பது உண்மையை தெளிவுபடுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் கங்குலி - அரசியலில் என்டிரி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR