#HBDRickyPonting - சாதனை நாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இன்று பிறந்தநாள் காணும் இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Last Updated : Dec 19, 2017, 02:58 PM IST
#HBDRickyPonting - சாதனை நாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்! title=

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் மிகமுக்கியமானவர் மற்றும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் இன்று தனது 43-வது பிறந்தநாளினை கொண்டாடுகின்றார்.

2004-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை டெஸ்ட் போட்டிகளிலும், 2002-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் அணிதலைவராக பதவி விகித்தார்.

2003-ஆம் ஆண்டு மற்றும் 2007-ஆம் ஆண்டில் நடைப்பெற்ற உலக கோப்பை போட்டிகளில் இவர் தன் அணிக்கு உலக கோப்பைகளை பெற்றுத் தந்தார்.

13000 ரன்களை குவித்த 4 வீரர்கள் கொண்டப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ் ஆகியோருடன் சேர்த்து இவரும் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துள்ளார்.

"27,483 சர்வதேச ரன்கள். 71 சதங்கள், 146 அரைசதங்கள்" - இவரது கிரிக்கெட் டைரியின் பக்கங்கள்!... இச்சாதனை நாயகன் இறுதியாக 2012-ஆம் ஆண்டு டிசம்பரில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இன்று பிறந்தநாள் காணும் இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

 

Trending News