அமித்ஷா விவகாரம்... எதிர்க்கட்சிகள் போர்க்கோடி... இபிஎஸ் மட்டும் அமைதி காப்பது ஏன்?

Tamil Nadu Latest News Updates: அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்காமல், தொடர்ந்து அமைதி காப்பது ஏன் என எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் எஸ். ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 19, 2024, 02:36 PM IST
  • அமித்ஷா விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
  • எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.
  • அமித்ஷா பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரிக்கை
அமித்ஷா விவகாரம்... எதிர்க்கட்சிகள் போர்க்கோடி... இபிஎஸ் மட்டும் அமைதி காப்பது ஏன்? title=

Tamil Nadu Latest News Updates: அம்பேத்கர், அம்பேத்கர் என சொல்வது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டது என்றும் இத்தனை முறை அம்பேத்கர் பெயரை சொல்லியதற்கு பதில் கடவுளின் பெயரை சொல்லியிருந்தாலாவது சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என்றும் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் அமித்ஷா (Amit Shah Ambedkar Controversy) பேசியிருந்தார். அமித்ஷாவின் இத்தகைய பேச்சு அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன.

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் எழுப்பிய எதிர்க்கட்சிகள், அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பினர். மேலும் அமைச்சரவையில் இருந்து அமித்ஷாவை நீக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கும் எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அமித்ஷாவுக்கு கடும் கண்டனஹ்களை தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

மேலும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, விசிக உள்ளிட்டவை நாடு முழுவதும் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் மறியல், உருவ பொம்மை எரிப்பு போன்ற சம்பவங்களும் பதிவாகி உள்ளன. மாநிலங்களவை வளாகத்திலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்ட நிலையில், நாடாளுமன்ற வளாகமே இன்று பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் படிக்க | வீடு கட்ட தமிழக அரசு வழங்கும் ரூ. 3.50 லட்சம்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

மறுபுறம், எதிர்க்கட்சிகள் இதை தேவையின்றி சர்ச்சையாக்குவதாக பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், நாடு முழுவதும் அமித்ஷாவை பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இதுகுறித்து ஏன் வாய்திறக்கவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி (Tamilnadu Law Minister Regupathy) அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமைதியோ அமைதி...

குறிப்பாக, அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம், "வலிக்காமல் வலியுறுத்த" கூட  மனமில்லாமல் அமைதி… அமைதியோ அமைதி... என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது பதிவில்,"அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் திமுகவும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு முழுக்க திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாடாளுமன்ற வளாகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனம்

சட்டமேதை, சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கருக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) வாய் மூடிக்கிடக்கிறார். ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சியை அழிக்க கொண்டுவரத் துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதுவும் கூறாமல் அமைதி... இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி...

அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் "வலிக்காமல் வலியுறுத்த" கூட  மனமில்லாமல் அமைதி… இப்படி அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி. யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று..." என கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! திமுக vs காங்கிரஸ்.. அதிமுக புறக்கணிப்பு? பாஜக யோசனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News