ICC ODI Rankings: முதலிடத்தை மீண்டும் தக்க வைத்த விராட் கோலி!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை வெளியிட்டது. பேட்ஸ்மென்களுக்கான தர வரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 29, 2020, 03:56 PM IST
  • இந்த பட்டியலில் கோஹ்லி 871 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
  • பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில், நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட்டுக்கு பின்னால் இரண்டாவது இடத்தில் பும்ரா உள்ளார்.
  • ஆல் ரௌண்டர்களுக்காக டாப் 10 பட்டியலில் இந்தியாவிலிருந்து ரவீந்திர ஜடேஜா மட்டுமே உள்ளார்.
ICC ODI Rankings: முதலிடத்தை மீண்டும் தக்க வைத்த விராட் கோலி!! title=

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை (ODI Rankings) வெளியிட்டது. பேட்ஸ்மென்களுக்கான தர வரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். செவ்வாயன்று வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் பந்து வீச்சாளர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் விராட் கோஹ்லி (Virat Kohli) 871 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து அவரது சக வீரர் ரோஹித் சர்மா 855 புள்ளிகளுடனும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 829 புள்ளிகளுடனும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்களுக்கான ஒரு நாள் போட்டி தர வரிசைப் பட்டியலில், நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட்டுக்கு பின்னால் இரண்டாவது இடத்தில் பும்ரா உள்ளார்.

ஆல் ரௌண்டர்களுக்காக டாப் 10 பட்டியலில் இந்தியாவிலிருந்து ரவீந்திர ஜடேஜா மட்டுமே உள்ளார். ஆப்கானிஸ்தானின் முகமது நபி இந்தப் பட்டியோயலில் முதலிடத்தில் உள்ளார். இதற்கிடையில், இங்கிலாந்தின் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரின் மீது தரவரிசைக் கண்ணோட்டத்தில் கவனம் செலுத்தப்படும். ஏனெனில் தற்போதைய உலகக் கோப்பை சாம்பியன்கள், ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக்கை வியாழக்கிழமை அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட உள்நாட்டுத் தொடர் மூலம் துவகுகின்றன.

உலகக் கோப்பையை வென்ற கேப்டன் எயோன் மோர்கன், பட்டியலில் 23 வது இடத்தில் உள்ளார். தனது முதல் ஒரு நாள் போட்டியில் எந்த அணிக்காக ஸ்காட்லேண்ட் அணிக்கு எதிராக மோர்கன் 14 ஆண்டுகளுக்கு முன்பு 99 ரன்கள் எடுத்தாரோ, அதே அணியை எதிர்த்து தற்போது அவர் தன் அணியை தலைமை வகித்துச் செல்கிறார்.  

ALSO READ: வெஸ்ட் இண்டீஸில் Caribbean Premier League 2020 அறிவிப்பு, முதல் போட்டி எப்போது?

அயர்லாந்தைப் பொறுத்தவரை, கடந்த நவம்பரில் நீண்டகால கேப்டன் வில்லியம் போர்ட்டர்ஃபீல்டிடமிருந்து பொறுப்பேற்ற கேப்டன் ஆண்டி பால்பிர்னி, ஜனவரி மாதம் கரீபியனில் மூன்று ஒருநாள் தொடரில் மட்டுமே அணிக்கு தலைமை வகித்துள்ளார். அவர் பேட்ஸ்மென்களின் தர வரிசைப் பட்டியலில் 46 வது இடத்தில் உள்ளார். அவர்களது அணியின் பால் ஸ்டிர்லிங் 27 ஆவது இடத்தில் உள்ளார். 2013 ஆம் ஆண்டில் அவர் தர வரிசைப் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையிலான ஒருநாள் தொடர் ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக்கின் தொடக்கத்தையும் குறிக்கும். இது உலகக் கோப்பை 2023 க்காக தகுதியான நாடுகளை தேர்வு செய்யும். முதல் ஏழு அணிகள் இந்தியாவில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வுக்கு தானாக தேர்ந்தெடுக்கப்படு விடும்.  

அணிகள் ஒரு வெற்றிக்கு 10 புள்ளிகளையும், சமமான முடிவுக்கு ஐந்து புள்ளிகளையும் பெறும். 

ALSO READ: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வெளுத்து வாங்கிய மனோஜ் திவாரி: வைரலாகும் Post!!

Trending News