WTC Final: 4வது நாள் ஆட்டமும் ரத்து! 5வது நாளில் வானிலை எப்படி இருக்கும்

ICC World Test Championship Final 2021: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி நடைபெற்ற நான்கு நாட்களும் மோசமான வானிலை, மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ரிசர்வ் டே அன்று போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 21, 2021, 09:38 PM IST
WTC Final: 4வது நாள் ஆட்டமும் ரத்து! 5வது நாளில் வானிலை எப்படி இருக்கும்

ICC World Test Championship Final 2021: இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் நான்காவது நாளிலும் மழை காரணமாக முற்றிலும் ஆட்டம் தடைப்பட்டுள்ளது. சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த வரலாற்று சிறப்புமிக்கப் போட்டியின் நான்காவது நாளில் தொடர்ச்சியாக 5 மணி நேரம் மழை பெய்ததை அடுத்து நடுவர்கள் இன்றைய ஆட்டத்தை ரத்து செய்துள்ளனர். 

இதற்கு முன்பே, ஜூன் 18 ஆம் தொடங்கிய இந்த போட்டியின் முதல் நாள் மழை காரணமாக முற்றிலுமாக தடைபட்டது. டாஸ் போடக்கூட இரண்டு அணிகள் கேப்டன் களத்திற்கு வர முடியவில்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி நடைபெற்ற நான்கு நாட்களும் மோசமான வானிலை, மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ரிசர்வ் டே அன்று போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மறுபுறம், நியூசிலாந்தின் அணி போட்டியின் மூன்றாவது நாளில் ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது, 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. 

ALSO READ |  WTC: இந்தியாவின் ஆட்டத்தைப் பார்த்து யூடர்ன் அடித்த மைக்கேல் வாகன்

இருப்பினும், போட்டியின் 5 வது நாளில் மழை பெய்ய வாய்ப்பில்லை எனக் கணிக்கப்பட்டு உள்ளதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. 5 வது நாள் வானிலை பற்றி பார்த்தால், ​​வானம் மிகவும் தெளிவாக இருக்கும். இதனால் இந்த போட்டியில் இரண்டு அணி வீரர்களும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "ரிசர்வ் டே" முறையை பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் வெற்றி பெறுவது யார் என அறிய இன்னும் 2 நாட்கள் உள்ளது.

ஒருவேளை இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மாற்று நாள் (Reserve Day Rules) நடத்தப்பட்டால், அது ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மழை மற்றும் மோசமான வெளிச்சம் காரணமாக 90 ஓவர்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டால், ரிசர்வ் டே" நாளில் போட்டி நடத்தப்படும். இதுவரை மழைக் காரணமாக 2 நாட்கள் மற்றும் 2 அமர்வுகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

இன்னும் மீதமுள்ள இரண்டு நாட்களில் மழை மற்றும் மோசமான வெளிச்சம் காரணமாக அணிகளால் விளையாட முடியவில்லை, ஆட்டம் எந்த முடிவையும் அடைய முடியாவிட்டால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை "டை" என ஐ.சி.சி அறிவிக்காது. அதற்கு மாறாக இரு அணிகளையும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கும் என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல பரிசுத் தொகை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். 

ALSO READ |  Test Match England v India: இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது

அதேநேரத்தில் ஐ.சி.சி அமைப்பின் ரிசர்வ் டே முடிவு குறித்து  முன்னாள் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News