INDvsAUS, 4th Test 3 Day: கடுமையான மழையால் பாதித்த 4-வது டெஸ்ட் தொடர்...

வெற்றி விளிம்பில் IND; அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறும் ஆஸ்., 

Last Updated : Jan 5, 2019, 12:32 PM IST
INDvsAUS, 4th Test 3 Day: கடுமையான மழையால் பாதித்த 4-வது டெஸ்ட் தொடர்... title=

10:10 PM - 5 Jan 2019

கடுமையான மழையால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது 3-வது டெஸ்ட் தொடர் கைவிடப்பட்டுள்ளது....


9:34 PM - 05-Jan-2019

SCG-ல் மோசமான சூரிய ஒளி காரணமாக ஆட்டம் பாதிப்பு... ஆஸ்திரேலியா 236 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்துள்ளது... 

 


இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.....

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்தநிலையில், இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து. 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193 ரன்களும், ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 159 ரன்களும் சேர்த்து வலுசேர்த்தனர்.

இந்திய அணி தேநீர் இடைவேளையில் 146 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 491 ரன்கள் எடுத்திருந்தது.  இதன்பின் ஆட்டம் தொடர்ந்தது.  இதில் ஜடேஜா (81), விஹாரி (42) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் வீரர் பன்ட் 159 (189 பந்துகள், 15 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியை இந்திய அணி டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்சை விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமாக ரன்களை சேர்த்து வருகிறது. தொடக்க வீரரான கவாஜா 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரிஸ் 77 ரன்களுடனும், மார்னஸ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அணியின் வீரர்களில் ஹாரிஸ் (79), கவாஜா (27), லபூஸ்சாக்னே (38), மார்ஷ் (8) மற்றும் ஹெட் (20) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அந்த அணி தேநீர் இடைவேளை வரை 68 ஓவர்கள் வரை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், பெய்னி (5 ரன்கள்) குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார்.  தொடர்ந்து ஹேண்ட்ஸ்காம்ப் மற்றும் கம்மின்ஸ் விளையாடி வருகின்றனர்.

இதையடுத்து தற்போது, ஆஸ்திரேலிய அணி 236 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்துள்ளது...

 

Trending News