உலக கோப்பையில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை பார்க்க ரசிகர்கள் காலை முதலே அங்கு குவியத் தொடங்கினர். அகமதாபாத் மைதானத்துக்கு வெளியே இந்திய ரசிகர்களின் கூட்டமே அலைமோதியது. மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்திய ரசிகர்களே பெரும்பாலும் குவிந்திருந்தனர். ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைய 10 மணிக்கு தான் அனுமதி என்பதால், அகமதாபாத் மைதானத்துக்கு வெளியே ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என குதூகலமாக இருந்தனர். இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்தியா ஜெய்ஹோ என விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர். வந்தே மாதரம் என்ற முழக்கத்தையும் எழுப்பிய ரசிகர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட்கோலி ஆகியோரின் பெயர்களை வானை முட்டும் அளவுக்கு உச்சரித்தனர்.
zyJohns) October 14, 2023
மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு வந்த டாப் 10 இந்திய கிரிக்கெட் வீரர்கள்
இதனால் அகமதாபாத் மைதானத்துக்கு வெளியே உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ரசிகர்களின் ஆரவாரத்தில் களைகட்டியது. பிசிசிஐ சார்பில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக சிறப்பு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தது. பாலிவுட் திரை பிரபலங்களான அர்ஜித் சிங், சங்கர் மகாதேவன் ஆகியோர் இந்த கலை நிகழ்ச்சிக்காக அகமதாபாத் மைதானத்தில் நேற்று முதல் தீவிர அரங்கேற்ற பயிற்சியையும் செய்து கொண்டிருந்தார்கள்.
மைதானத்துக்கு இந்த கலை நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என்பதற்காகவே முன்கூட்டியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்றுவிட்டனர். இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் கலை நிகழ்ச்சிக்காக 12.30 மணி வரை தொலைக்காட்சி முன்பு காத்திருந்தனர்.
hns) October 14, 2023
அப்போது தான் இந்த அறிவிப்பு வெளியானது. அதாவது, இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் என்பது மைதானத்தில் குழுமியிருக்கும் ரசிகர்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்படாது என தெரிவிக்கப்பட்டது. அதற்கான காரணம் பிசிசிஐ மற்றும் ஐசிசி தரப்பில் இருந்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம் என நினைத்த ரசிகர்களுக்கு இது கடைசி நேர ஷாக்காக இருந்துள்ளது. இருப்பினும் இந்தியா - பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியை எப்போதும் போல் நேரலையாக கண்டு ரசிக்கலாம்.
மேலும் படிக்க | Worldcup 2023: இன்னும் எத்தனை போட்டியில் வென்றால் இந்தியா அரையிறுதிக்கு செல்லும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ