இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான எவின் லீவிஸ் மற்றும் கைல் ஹோம் தலா 35 ரன்களை குவித்தனர். நிதான துவக்கத்தை அளித்த ஜோடியை பாண்டியா பெவிலியனுக்கு அனுப்பினார். துவக்க ஜோடியை தொடர்ந்து களமிறஹ்கிய ஷை ஹோம் 25 ரனக்ளுடனும், ராஸ்டன் சேஸ் 24 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்தது.
இந்திய அணி சார்பில் ஹார்திக் பாண்டியா மற்றும் உமேஷ் யாதவ் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். 190 என்ற வெற்றி சுலப இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
துவக்க வீரராக களமிறங்கிய ஷிகர் திவான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களிமிறங்கிய கேப்டன் வீராட் கோலி 3 ரன்களிலும், தினேஷ் கர்திக் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்த நிலையிலும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அஜிங்கியா ரகானே பொறுப்புடன் விளையாடினார். 91 பந்துகளில் 60 ரன்களை குவித்த ரகானே பிஷோ பந்தில் ஆட்டமிழந்தார்.
பின் களமிறங்கிய தோனி நிதானமாக விளையாடி 54 ரன்களை குவித்தார். எனினும் மற்ற வீரர்கள் ரன்களை குவிக்க தவறியதால் இந்திய அணி 49.4 ஓவர்களில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 11 ரன்களில் வெற்றியடைந்தது.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. ஜூலை 6-ம் தேதி இரு அணிகள் மோதும் தொடரின் இறுதி போட்டி நடைபெறுகிறது.