553 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா!

Last Updated : Aug 4, 2017, 02:44 PM IST
553 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா! title=

இலங்கைக்கு எதிரான பரபரப்பான இரண்டாவது டெஸ்டில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 10 மணி அளவில் துவங்கியது. இரண்டாம் நாள் ஆட்டமான இன்று அஸ்வின் மற்றும் சஹா -வின் அரை சதத்தினால் 500 ரன்களை தாண்டியது. 

இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் இரண்டாவது போட்டியில் நேற்று காலை கொழும்புவில் துவங்கியது. டாஸ் வென்று இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. 

நேற்றைய ஆட்டநேர முடிவில் பூஜார மற்றும் ரஹானே ஆகியோரின் சதத்தினால் இந்திய தனது இரண்டாவது டெஸ்டில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே பூஜாரா 133(232) ரன்களில் கருணரத்னே பந்தில் வெளியேறினர். அவருடன் கைகோர்த்து விளையாடிய ரஹானே 132(222) ரன்களில் புஷ்பகுமரா பந்தில் ஸ்டம்பிங் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்களில் சஹா மற்றும் அஸ்வினின் நிதானமான ஆட்ட்டதால் அரை சத்தத்தை எட்டினர். இவர்களின் அரை சதத்தினால் இந்திய 500 ரன்களை தாண்டியது.

தற்போதய நிலவரப்படி தேனிர் இடைவேளைக்கு முன்வரை, இந்திய அணி 150 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 538 ரன்கள் எடுத்துள்ளது.

சஹா 59(128) மற்றும் ஜடேஜா 37(60) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Trending News