புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்தியா நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி நாள் ஆட்டத்தின்போது போட்டியின் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்ற சாத்தியக்கூறுகள் இருந்தன.
இந்தியா வெற்றி பெற வேண்டுமானால் 10 விக்கெட்டுகளையும் இந்திய அணி எடுக்கவேண்டும். அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டுமானால் 291 ரன்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆட்டம் வெற்றி-தோல்வியின்றி சமனின் முடிவடையும் என்ற மூன்று சாத்தியங்கள் இருந்தன.
ஆனால், கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி கடுமையாக போராடி போட்டியை வென்றது. அதிலும் 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி என்பது அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்திய அணியின் பிரம்மாண்டமான இந்த வெற்றியைத் தொடர்ந்து, கோஹ்லி தலைமையிலான இந்திய அணியைப் பாராட்டினார், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி (BCCI President Sourav Ganguly). தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியை பாராட்டி இவ்வாறு எழுதியிருந்தார்: "சிறப்பான ஆட்டம். திறமை என்பது ஒருபுறம் இருக்கட்டும். மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், எதிரே இருக்கும் அழுத்தத்தை கையாளும் திறமை. இந்திய கிரிக்கெட் அணி, பிற அணிகளை விட முன்னிலையில் உள்ளது".
Great show ..The skill is the difference but the biggest difference is the absorbing power of pressure..indian cricket is far ahead then the rest @BCCI
— Sourav Ganguly (@SGanguly99) September 6, 2021
கங்குலியின் சிலாகிப்பான பாராட்டை பலரும் ஏற்றுக் கொண்டாலும், சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், கங்குலியின் கருத்தை சரி என்று ஒப்புக் கொள்ளவில்லை.
தற்போது அவரைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் தனது முன்னாள் கேப்டன் கங்குலியின் கருத்தில் இருந்து தான் மாறுபடுவதாக தெரிவித்துள்ளார்.
ALSO READ | லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!
தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஆஷிஷ் நெஹ்ரா, "சவுரவ் கங்குலியின் ட்வீட்டைப் பற்றி நீங்கள் சொல்கிறீர்கள். உண்மையிலேயே இந்திய அணி போட்டியின் அழுத்தத்தை நன்றாக உள்வாங்கினார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பிற அணிகளை விட இந்திய அணி முன்னிலையில் உள்ளது என்ற கருத்துடன் நான் 100% உடன்பாடவில்லை” என்று கூறினார்.
"எண்களைப் பற்றிப் பேசினால், உலககோப்பை டெஸ்ட் கிரிக்கெட்டில் (WTC ( World Test Championship)) நியூசிலாந்து அணி, இந்திய அணியை தோற்கடித்தது. கங்குலியின் சிந்தனையைப் போலவே, அவர்களும் முன்னணியில் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன், ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒன்றுக்கொன்று கடுமையான போட்டியாக இருக்கின்றன" என்று நெஹ்ரா தெரிவித்தார்.
ஐசிசி தரவரிசையைப் (ICC rankings) பார்த்தால், இந்திய அணி, கிரிக்கெட்டின் எந்த வடிவத்திலும் முதலிடத்தில் இல்லை. டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, ஒருநாள் போட்டிகளில் நான்காவது இடத்தில் உள்ளது. இருப்பினும், இந்திய அணி, அனைத்து அணிகளுடன் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.
கோஹ்லி தலைமையிலான இந்தியா இப்போது இங்கிலாந்துக்கு எதிராக ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும். இதற்கு முன்னதாக 2007ம் ஆண்டில் இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக இந்திய அணி போட்டித்தொடரை வென்று சரித்திரம் படைத்திருந்தது.
READ ALSO | இந்திய அணிக்கு இனி அஷ்வின் தேவையில்லை- கிறிஸ் ட்ரெம்லெட் சர்ச்சை பதிவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR