U19 WC: இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளப்போவது யார்?

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை 2வது அரையிறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 2, 2022, 03:58 PM IST
  • U19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி
  • இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்
  • இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?
U19 WC: இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளப்போவது யார்? title=

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை 2வது அரையிறுதிப்போட்டி இன்று மாலை நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் சாம்பியன் பட்டத்துக்கு தகுதியான அணிகளான இருக்கின்றன. இருப்பினும், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ALSO READ | பிரெட்லீ பந்துவீச பயந்த இந்திய ஜாம்பவான்..! 

ஆன்டிகுவாவில் நடைபெறும் போட்டி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. காலிறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தையும், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்திய அணியை பொறுத்தவரை 10 முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. பயிற்சி ஆட்டத்திலேயே இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. உலகக்கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் 7 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

ALSO READ | ஐபிஎல் மெகா ஏலம்: அதிகார்வப்பூர்வ தேதி அறிவிப்பு!

இந்த உலகக்கோப்பையில் கொரோனா பாதிப்புக்கு இடையே இந்திய அணி அரையிறுதி வரை வந்துள்ளது. கேப்டன் யாஷ்துல் உள்ளிட்ட 6 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டபோதும், அவர்களுக்கான மாற்று வீரர்களைக் கொண்டு இந்தியா விளையாடியது. இந்தியா வலுவான அணியாக இருக்கும்போது, ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. அந்த அணியின் கேப்டன் கூப்பர் கோனாலி மற்றும் தொடக்க ஆட்டக்காரர் டிக் விலே சிறப்பாக விளையாடி வருகின்றனர். 17 வயதான விலே கடந்த நான்கு போட்டிகளில் முறையே 86, 6, 101 மற்றும் 71 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில், டாம் ஒயிட் மற்றும் வில்லியம் சால்ஸ்மேன் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News