IND vs NZ டி20 தொடர் முழு அட்டவணை போட்டி நேரம் நாள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 16, 2021, 03:13 PM IST
IND vs NZ டி20 தொடர் முழு அட்டவணை போட்டி நேரம் நாள் குறித்து அறிந்து கொள்ளுங்கள் title=

இந்தியா vs நியூசிலாந்து (IND vs NZ) T20 தொடர் 2021 அட்டவணை: டி20 உலகக் கோப்பை 2021 (T20 World Cup 2021) முடிந்ததுவிட்டது. இனி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இருதரப்பு தொடரில் மோதவுள்ளன. இரு அணிகளும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் சந்திக்க உள்ளன. உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்வியை மறந்துவிட்டு புதிதாக களம் இறங்க விரும்புகிறது. "ஹிட்மேன்" என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா அணியை வழிநடத்துவார். விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ரோஹித்துக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம், நியூசிலாந்து அணி (New Zealand National Cricket Team) உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றிருக்கலாம். ஆனால் உலகக் கோப்பையில் அவர்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த உத்வேகம் இந்திய அணிக்கு எதிரான தொடரில் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கிவி அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது. அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட மாட்டார். டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்த டி20 தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை டிம் சவுத்தி சமாளிப்பார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும்,

இந்தியா-நியூசிலாந்து டி20 தொடரின் அட்டவணை:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் புதன்கிழமை (நவம்பர்  17) அன்று தொடங்குகிறது. 

ALOS READ |  சிவசாமியின் ஆட்டம் வீண்! உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!

> முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நவம்பர் 17ம் தேதி நடக்கிறது. 
> இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி நவம்பர் 19ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. 
> இந்தத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. 

இந்தியா-நியூசிலாந்து டி20 தொடரின் நேரம்:
இந்தத் தொடரின் மூன்று போட்டிகளும் இரவு 7 மணிக்குத் தொடங்கும் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். அதேபோல இரு அணிகளுக்கான டாஸ் மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.

இந்தியா-நியூசிலாந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது?
இந்தியா மற்றும் நியூசிலாந்து டி20 தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னட சேனல்களில் போட்டிகளைப் பார்க்கலாம். இது தவிர, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் லைவ் ஸ்ட்ரீமிங்கைக் காணலாம்.

ALOS READ |  IPL 2022: விராட் கோலிக்குப் பிறகு RCB அணியின் புதிய கேப்டன் இவர்தானா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News