மழையின் காரணமாக இந்தியா - நியூசிலாந்து போட்டி ஒத்திவைப்பு!

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைப்பெற்று வரும் முதல் அரையிறுதி போட்டி மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூலை 10-ஆம் தேதி விட்ட இடத்தில் இருந்து தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Written by - Mukesh M | Last Updated : Jul 9, 2019, 11:17 PM IST
மழையின் காரணமாக இந்தியா - நியூசிலாந்து போட்டி ஒத்திவைப்பு! title=

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைப்பெற்று வரும் முதல் அரையிறுதி போட்டி மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூலை 10-ஆம் தேதி விட்ட இடத்தில் இருந்து தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

ஆரம்பம் முதலே இந்தியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தினறிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க துவங்கியது. ஆட்டத்தின் 46.1 ஓவர்கள் வரையில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்துள்ளது. பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அணி தலைவர் கேன் வில்லியம்ஸன் நிதானமாக விளையாடி 67(95) ரன்கள் குவித்து வெளியேறினார். இவரை தொடர்ந்து வந்த ரோஸ் டெய்லர் தற்போது களத்தில் நின்று 67*(85) ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு துணையாக டாம் லாத்தம் 3*(4) ரன்களுடன் களத்தில் உள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மார்டின் குப்டில் 1(14) ரன்களில் வெளியேறினார்.

இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார், பூம்ரா, ஹார்டிக் பாண்டையா, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாஹல் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் மழை இடைவிடாது பெய்து வரும் நிலையில் போட்டி இன்று கைவிடப்படுவதாகவும், மீண்டும் நாளை விட்ட இடத்தில் இருந்து தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 46.2 ஓவரில் தொடங்கும். 

போட்டி வழக்கம் போல் காலை 10.30 மணியளவில்(உள்ளூர் நேரப்படி) நடைபெறும். அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணியளவில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை நாளையும் மழை தொடர்ந்தால், ஒரு வேளை போட்டி கைவிடப்படும் என்ற நிலைமை ஏற்பட்டால் இதுவரை அணிகள் பெற்றிருக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு ஒரு அணி தேர்ந்தெடுக்கப்படும். அப்படியெனில் இந்திய அணியே அதிகப் புள்ளிகள் கொண்டுள்ளதால், நேரடியாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Trending News