இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி நடைபெறுவதில் சிக்கல்!

IND vs SA 1st ODI: லக்னோவில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Oct 6, 2022, 09:44 AM IST
  • இன்று தொடங்குகிறது முதல் ஒருநாள் போட்டி.
  • முன்னதாக டி20 தொடரை வென்று இருந்தது இந்தியா.
  • தவான் தலைமையில் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி நடைபெறுவதில் சிக்கல்! title=

IND vs SA 1st ODI Match: லக்னோவில் உள்ள ஏகனா அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் ஒருநாள் போட்டி இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 6) தொடங்குகிறது. ஆனால் இன்று லக்னோவில் ஒரு நாள் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  லக்னோவில் முதல் ஒருநாள் போட்டி ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாள் முழுவதும் சில இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய நேரப்படி மதியும் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும் போது 94 சதவீதம் மேக மூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் படிக்க | இப்புடியா பண்ணுவ? சிராஜை திட்டிய சாஹர்! வைரலாகும் வீடியோ!

வியாழன் பிற்பகல் வெப்பநிலை சுமார் 30 டிகிரி மற்றும் ஈரப்பதம் அளவு 81 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், பெரும்பாலும் மேகமூட்டத்துடன் கூடிய மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  லக்னோ ஏகானா ஸ்டேடியத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்ததால் ஆடுகளம் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தது. இன்றும் மழை பெய்தால், திட்டமிடப்பட்ட நேரமான மதியம் 1 மணிக்கு டாஸ் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

செவ்வாய்க்கிழமை இரவு முதல் லக்னோவில் கனமழை பெய்து வருகிறது, வியாழக்கிழமை அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. "மழை நம் கட்டுப்பாட்டில் இல்லை, ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், இந்த மைதானத்தின் வடிகால் அமைப்பு மிகவும் நன்றாக உள்ளது. இன்று போட்டி நடக்கும் என நம்புகிறோம். நாங்கள் தயாராகிவிட்டோம், வீரர்கள் நல்ல மனநிலையில் உள்ளனர்” என்று கேப்டன் ஷிகர் தவான் கூறினார்.  முந்தைய டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவை 2-1 என இந்தியா தோற்கடித்திருந்தது. “தென்னாப்பிரிக்கா நல்ல அணியைக் கொண்டுள்ளது. வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதியாகும், ஆனால் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது முக்கியம்” தவான் கூறினார்.

இந்திய ஒருநாள் அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சாஹர்

மேலும் படிக்க | INDvsSA: அப்படி என்ன சொன்னார் ரோகித்? குலுங்கி குலுங்கி சிரித்த தினேஷ் கார்த்திக்: Watch

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News