IND vs WI: இந்தியா தோற்றால் தொடரை இழக்கும்; விளையாடப்போகும் 11 பேர் யார்?

மேற்கிந்திய தீவுகள் இந்த போட்டி மூலம் சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் ஆட உள்ளது.  இந்திய அணி தொடரை வெல்ல வேண்டும் என்றால், இரண்டாவது போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 18, 2019, 01:11 PM IST
IND vs WI: இந்தியா தோற்றால் தொடரை இழக்கும்; விளையாடப்போகும் 11 பேர் யார்? title=

விசாகப்பட்டினம்: இன்று (டிசம்பர் 18) நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை (West Indies) எதிர்கொள்ளும் போது இந்தியா அணியின் பந்து வீச்சாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்ற அவருக்கு வாய்ப்பு உள்ளது. மறுபுறம், இந்திய அணியை (Team India) பொறுத்த வரை இரண்டாவது ஒருநாள் போட்டி "டூ ஆர் டை" என்ற நிலையில் உள்ளது. இந்திய அணி தொடரை வெல்ல வேண்டும் என்றால், இரண்டாவது போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம். எனவே விசாகப்பட்டினம் (Visakhapatnam ODI) ஒருநாள் போட்டி அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக உள்ளது. இந்த போட்டி தொடரின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு (India vs West Indies)  இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி (Vizag ODI) மதியம் 1.30 மணி முதல் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். குறிப்பாக, பந்துவீச்சை வலுப்படுத்த வேண்டும்.

முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் ஷிம்ரான் ஹெட்மியர் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் இந்திய பந்து வீச்சாளர்களை திணறடித்தனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான தீபக் சாஹர், முகமது, சிவம் துபே ஆகியோர் எதிர்பார்த்த விதத்தில் செயல் படவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் பயனற்றவர்கள் என்பதை நிரூபித்தனர். இத்தகைய சூழ்நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டாவது போட்டியில் பந்துவீச்சு வரிசையை மாற்றப்படலாம் அல்லது அணிக்கு கூடுதல் பந்து வீச்சாளரை சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.

இரண்டாவது போட்டியில் இந்திய அணி நிர்வாகம் கூடுதல் பந்து வீச்சாளரை களமிறக்கும் என நம்பப்படுகிறது. இதற்காக, கேப்டன் கோஹ்லி ஒரு பேட்ஸ்மேனை விளையாடும் பதினொன்றிலிருந்து குறைக்க வேண்டும். விளையாடும் பதினொன்றில் கேதர் ஜாதவுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. இது அணியில் மூன்று சிறப்பு சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்கும். தீபக் சாஹர், முகமது ஷமி ஆகியோர் சிறப்பு வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள். இந்திய அணியில் கவலைக்கொள்ள வேண்டிய மற்றொரு பிரச்சனை என்னவென்றால், அது பீல்டிங். டி 20 முதல் ஒருநாள் போட்டி வரை இந்தியாவின் பீல்டிங் சிறப்பாக இல்லை. கடந்த போட்டிகளிலும், ஷ்ரேயாஸ் ஐயர் ஷிம்ரான் ஹெட்மியரின் கேட்சை தவறவிட்டார்கள். அதன் தாக்கத்தால் அணி தோல்வியை அனுபவிக்க வேண்டியிருந்தது.

இந்திய அணியின் முதல் ஒருநாள் போட்டியில் பேட்ஸ்மேன்களில் ரிஷாப் பந்த் (71), ஸ்ரேயாஸ் ஐயர் (70), கேதார் ஜாதவ் (40) ஆகியோர் நல்ல இன்னிங்ஸில் விளையாடினர்கள். முதல் மூன்று வீரர்கள் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோர் சீக்கிரம் அவுட் ஆகியும் இந்திய அணி 287 ரன்கள் எடுத்தது. அத்தகைய சூழ்நிலையில், பேட்டிங் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை.

மேற்கிந்திய தீவுகள் இந்த போட்டி மூலம் சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் ஆட உள்ளது. 2006 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல முடியாத  விண்டீஸுக்கு அணி இன்றைய போட்டி பெரும் வாய்ப்பாக உள்ளது. மேலும் கேப்டன் கீரோன் பொல்லார்ட் தனது தலைமையின் கீழ் சாதனையை உருவாக்க தனது சிறந்த முயற்சியை மேற்கொள்வார்.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி.

மேற்கிந்திய தீவுகள்: கீரோன் பொல்லார்ட் (கேப்டன்), சுனே ஆம்ப்ரோஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், கீமோ பால், ரோஸ்டன் சேஸ், அல்சாரி ஜோசப், ஷெல்டன் கோட்ரெல், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News