மேற்கிந்தியா-வுக்கு எதிரான தொடரில் துணை கேப்டனாக ரஹானே!

உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பைக்கான இரண்டு போட்டிகளை உள்ளடக்கிய மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை, இந்தியா நாளை முதல் துவங்குகிறது!

Mukesh M முகேஷ் | Updated: Aug 2, 2019, 02:49 PM IST
மேற்கிந்தியா-வுக்கு எதிரான தொடரில் துணை கேப்டனாக ரஹானே!

உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பைக்கான இரண்டு போட்டிகளை உள்ளடக்கிய மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை, இந்தியா நாளை முதல் துவங்குகிறது!

2019 சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியுடன் வெளியேறியா இந்தியா, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் களமிறங்குகிறது. ஆகஸ்ட் 3-ஆம் நாள் துவங்கி செப்டம்பர் 3-ஆம் நாள் வரை நடைப்பெறும் இந்த சுற்றப்பயணத்தில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இந்த மூன்று தொடர்களுக்கும் தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் துணை கேப்டனாகவும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அஜிங்க்யா ரஹானே துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரை, ஜேசன் ஹோல்டர் 50 ஓவர் போட்டிக்கு தலைமை வகிப்பார், அதே நேரத்தில் கார்லோஸ் ப்ரைத்வைட் டி20 அணியின் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை 2019 தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடன் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய இந்தியா, இந்த இழப்பைத் தணித்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் தங்களது பலத்தை நிறுபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

---மேற்கிந்திய தீவுகளுக்கான இந்தியாவின் சுற்றுப்பயணத்தின் முழு அட்டவணை---

  • முதல் t20 போட்டி: ஆகஸ்ட் 3-ஆம் நாள் புளோரிடாவின் லாடர்ஹில்லில் இரவு 8 மணியளவில் நடைப்பெறும்.
  • இரண்டாது t20 போட்டி: ஆகஸ்ட் 4-ஆம் நாள் புளோரிடாவின் லாடர்ஹில்லில் இரவு 8 மணியளவில் நடைப்பெறும்.
  • மூன்றாவது t20 போட்டி: ஆகஸ்ட் 6-ஆம் நாள் கயானாவில் இரவு 8 மணியளவில் நடைப்பெறும்.
  • முதல் ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 8-ஆம் நாள் கயானாவில் இரவு 7 மணியளவில் நடைப்பெறும்.
  • இரண்டாவது ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 11-ஆம் நாள் டிரினிடாட், போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இரவு 7 மணியளவில் நடைப்பெறும்.
  • மூன்றாவது ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 14-ஆம் நாள் டிரினிடாட், போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இரவு 7 மணியளவில் நடைப்பெறும்.
  • முதல் டெஸ்ட் போட்டி : ஆகஸ்ட் 22-26 ஆகிய தினங்களில் ஆன்டிகுவாவின் நார்த் சவுண்டில் இரவு 7 மணியளவில் நடைப்பெறும்.
  • இரண்டாவது டெஸ்ட் போட்டி : ஆகஸ்ட் 30- செப்டம்பர் 26 ஆகிய தினங்களில் ஜமைக்காவின் கிங்ஸ்டனில் இரவு 8 மணியளவில் நடைப்பெறும்.

ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி - விராட் கோலி, ரோஹித் சர்மா, சிகர் தவான், KL ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், கேதர் ஜாதவ், மொகமது ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சாய்னி

டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி - விராட் கோலி, ரஹானே, மயங்க் அகர்வால், ராகுல், புஜாரா, ஹனுமான் விஹாரி, ரோகித் ஷர்மா, ரிஷாப் பன்ட், விரத்திமன் சாஹா, அஷ்வின், ரவிச்சந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இசாந்த் சர்மா, மொகமது ஷமி, ஜாஸ்பிரிட் பூம்ரா, உமேஷ் யாதவ்.

டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி - விராட் கோலி, ரோகித் ஷர்மா, சிகர் தவான், ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குர்ணல் பாண்டையா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சஹர், நவ்தீப் சயினி.